வணக்கம் நண்பர்களே !
சோதிடம் எதற்கு பார்க்கிறோம் என்பதைப்பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பூர்வபுண்ணிய தொடர் ஆரம்பித்தவுடன் எனக்கு பாதி பேர்களிடம் இருந்து பாராட்டுதலும் பாதி பேர்களிடம் எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளன. அதனால் உங்களுக்கு தகுந்த விளக்கம் கொடுத்துவிடவேண்டும் என்பதால் எழுதுகிறேன்.
நமக்கு கடவுள் கொடுத்த மிகப்பெரிய சொத்து எது என்றால் நமக்கு ஜாதகம் கணித்துக்கொடுத்தது தான். இதனை வைத்து நமது வாழ்க்கையை நாம் பார்த்துக்கொள்வதற்க்கு ஒரு நல்ல வழியை நமக்கு இறைவன் கொடுத்து இருக்கிறான். உங்களுக்கு ஏற்படும் சந்தோஷம் துக்கம் என்று அனைத்தையும் தெரிந்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பு தான் சோதிடம்.
இது முதலில் பார்க்க ஆரம்பித்தது உங்களால் ஆன்மீகத்தை எப்படி அடைவது. அதற்க்கு என்ன வழி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ளதான் இதனை முதலில் கையில் எடுத்தார்கள். இது வளர்ச்சி அடைய அடைய ஒவ்வொரு நிகழ்வுக்கும் பார்க்கஆரம்பித்துவிட்டார்கள்.
உங்களுக்கு ஜாதகத்தில் அனைத்து கிரகமும் கெட்டு இருந்தால் கூட ஏதாவது ஒரு வழியை ஆண்டவன் ஏற்படுத்தி கொடுத்து இருப்பான். அந்த வழி வழியாக நாம் முன்னேற்றம் அடையலாம்.
உங்களுடைய ஜாதகத்தை பார்த்து பயப்படதேவையில்லை. நான் எழுதும் பலன்கள் அனைத்தும் பொதுப்பலன்கள் அதனை நீங்கள் உடனே கையில் எடுத்துக்கொண்டு அப்ப எனக்கு இப்படி நடக்குமா என்று கவலை அடைகிறீர்கள்.
இப்படி நீங்களே பார்த்து முடிவு எடுத்துக்கொள்ள வேண்டாம். கிரகங்களை விட இறைவன் பெரியவன் அவனை நம்பிவிட்டால் வேறு ஏதம் தேவையில்லை. முற்காலத்தில் நவக்கிரகத்திற்க்கு சந்நிதி கூட கோவிலில் கிடையாது. எனக்கு தெரிந்தவரை ராஜராஜ சோழன் காலத்திற்க்கு பிறகு தான் நவகிரக சந்நிதி கோவிலில் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.
எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் அதனை போக்குவதற்கு வழிகள் நிறைய உள்ளன. நான் உங்களுக்கு ஒரு தோஷத்தை சொல்லும்போதே அதை நீக்குவதற்க்கு வழி என்ன என்பதையும் சொல்லிவிடுகிறேன் அதனால் கவலை படகூடாது.
சோதிடம் இப்பொழுது தான் அதிக இளைஞர்கள் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நமது பிளாக்கையும் இளைஞர்கள் அதிகம் பேர் படிக்கிறார்கள். நீங்கள் படித்துவிட்டு கவலை படவேண்டாம்.
சோதிடக்காரன் ஒன்றும் கடவுள் இல்லை. நாங்கள் சொல்லுவது அப்படியே எந்த ஜாதகனுக்கும் நடைபெறாது என்பதை உங்கள் மனதில் வையுங்கள். படைத்தவனை நம்புங்கள். உங்களுக்கு பயம் ஏதும் ஏற்பட்டால் என்னை தொடர்புக்கொண்டு பேசிவிடுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
ஐயோ எனக்கு ரொம்ப பயமா இருக்கு..he he he.........
அஷ்டமா சித்துகள் தெரியுமா உங்களுக்கு,அஷ்டமா சித்துகள் தெரிஞ்சவங்க யார்னா இப்போ வாழ்ந்துட்டு இருக்காங்களா ..இருந்தா சொல்லுங்க ....
Post a Comment