Followers

Tuesday, October 15, 2013

நம்பினால் நம்புங்கள்


வணக்கம் நண்பர்களே!
                   ஒரு இடத்தில் பெரிய வியாபாரம் நடந்துக்கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்திற்க்கு பிறகு ஒன்றும் வியாபாரம் நடைபெறாது. அதற்கு காரணம் அந்த வியாபாரத்தை பார்த்து மக்கள் வைக்கும் கண்திருஷ்டியாக இருக்கும் அல்லது யாராது தீயவேலைகள் செய்வதால் அந்த இடத்திற்க்கு மக்கள் வராமல் போய்விடுவார்கள்.

பெரிய பில்டிங்காக இருந்தால் அந்த பில்டிங் முதலாளிக்கு யாரும் தீங்கு செய்து இருந்தால் அந்த பில்டிங்கில் யார் கடை வைத்தாலும் முன்னேற்றம் காணமுடியாது. ஒரு சிலருக்கு அந்த கடைக்கு மட்டும் தீங்கு செய்வார்கள். ஒரு மதத்தினர் இருக்கின்றனர் அவர்களுக்கு கடை கொடுத்தால் அவர்களை வெளியில் செல்ல சொல்லும்பொழுது அவர்கள் இந்தமாதிரி வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

எப்படி இருந்தாலும் அந்த இடத்திற்க்கு நாங்கள் போகும்போதே எங்களுக்கு தெரிந்துவிடும் உள்ளே என்ன இருக்கின்றது என்று தெரிந்துவிடும். அதனை வெளியேற்றினால் மட்டுமே அங்கு வியாபாரம் செய்யமுடியும். அதனை நாங்கள் வெளியேற்றிவிட்டு பூஜை செய்யும்பொழுது மட்டுமே அந்த இடம் மறுபடியும் நல்ல நிலைக்கு வரும்.

எப்படி வியாபாரம் விழுந்து நஷ்டத்தை சந்தித்தாலும் அதனை ஆன்மீகம் வழியில் சரிசெய்துவிடலாம். இதனை நம்புவது பெரிய ஆட்கள் மட்டுமே அவர்கள் செய்துக்கொண்டு அவர்களின் வியாபாரத்தை காப்பாற்றிக்கொள்கிறார்கள். நடுத்தரவர்க்கத்தினர் இது எல்லாம் நம்பிக்கை கொள்வதில்லை.

நான் இது எல்லாம் செய்துக்கொடுத்துவிடுவேன் என்ன என்றால் இவர்கள் தரும் பணம் எனக்கு பற்றவில்லை அதனால் செய்வதில்லை. ஒரு லட்சம் பணத்தை நாம் சம்பாதித்து கொடுத்தால் ஒரு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் நமக்கு அதில் ஒன்றும் மிஞ்சாது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: