வணக்கம் நண்பர்களே!
பல சாமியார்களை நான் பார்த்து இருக்கின்றேன். அவர்கள் அனைவரும் குளிக்காமல் பல நாட்கள் இருந்தாலும் ஒரு சிறிய வாடை கூட அவர்களின் உடலில் இருந்து வராது. இது எப்படி சாத்தியப்படும் என்பதை நான் கற்றுக்கொண்டபிறகு தான் இதனைப்பற்றி தெரியவந்தது.
நமது உடலில் இருக்கும் நவதுவாரங்கள் வழியில் நாம் சாப்பிடும் உணவு போய் அடைத்துக்கொண்டால் அதிலிருந்து வாடையை உடல் வெளிப்படுத்துகிறது. சாதாரண மனிதர்களுக்கு இப்படி தான் நடைபெறுகிறது. சாமியார்கள் மூச்சு பயிற்சி செய்யும்பொழுது அவர்கள் நவதுவாரங்களுக்கும் காற்றை அனுப்பி சுத்தம் செய்வது போல் செய்கிறார்கள். அந்த உணவை தங்கவிடாமல் செய்கின்றனர்.
அசுத்தம் இருந்த இடத்தை காற்றை வைத்து வெளியேற்றிவிடுவதால் அவர்களின் உடலில் இருந்து ஒரு வாடை கூட வெளியில் வருவது கிடையாது. அவர்கள் எத்தனை நாட்கள் குளிக்காமல் இருந்தாலும் அவர்களின் உடலில் இருந்து வாடை வராது. தினமும் புத்துணர்ச்சியோடு இருப்பார்கள். தண்ணீர் இருக்கும் இடத்தில் குளித்துக்கொள்வார்கள். இதனை செய்பவர்கள் குளிக்காமலே பூஜை செய்யலாம்.
நீங்கள் காலையில் பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து தியானம் மற்றும் மூச்சு பயிற்சி செய்து பாருங்கள் உங்களின் உடலும் கூடிய விரைவில் இப்படி மாறிவிடும். அதுவாகவே மாறுவதற்க்கு பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்யும்பொழுது சாத்தியப்படுகிறது.
யாருப்ப அதிகாலையில் எழுவது என்று சொல்லுவீர்கள் என்ன செய்வது எதையாவது அடையவேண்டும் என்றால் ஒன்றை இழக்கவேண்டும். காலையில் எழுவது மிகவும் நல்லது என்பதை எழுந்து பார்க்கும்பொழுது மட்டுமே அதனை உணரமுடியும்.
என்ன செய்வீர்களா?
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment