Followers

Thursday, October 17, 2013

அன்னாபிஷேகம்


வணக்கம் நண்பர்களே!
                    18.10.2013 வெள்ளி அன்று அன்னாபிஷேகம். சிவன் மேனி முழுவதும் அன்னத்தோடு காட்சியளிப்பார். வருடத்திற்க்கு ஒரு முறை மட்டும் இப்படி காட்சியளிப்பார். உலக உயிர்களுக்கு அன்னத்தை படைத்த இறைவனுக்கு நாம் நன்றி செலுத்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. ஒரு சிலர் இன்றைய நாள் உயிர்களுக்கு அன்னத்தை படைத்த நாள் என்றும் சொல்லுவார்கள். 

சிவன் ஒரு அபிஷேகபிரியர் என்பதால் அவருக்கு அன்னத்தை அபிஷேகமாக செய்கிறார்கள.நாம் சாப்பிடும் அரிசி கூட ஒரு லிங்கம் போல் தான் அதன் வடிவத்தை பார்த்தால் லிங்கம் போல் தான் இருக்கின்றதால் அதனையே அபிஷேகமாக செய்கின்றனர். அதனை வைத்து ஒரு பெரிய லிங்கத்திற்க்கு லிங்கத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. 

நமக்கு இந்த நாள் விஷேசமான ஒரு நாளாக தான் இருக்கின்றது. சிவனின் மேனியில் உள்ள அன்னத்தை நமக்கும் பிரசாதமாக கொடுப்பார்கள். பாதி அன்னத்தை கோவில் குளங்களிலும் போய் கொட்டுவார்கள். குளங்களில் உள்ள ஜீவராசிகள் அன்னத்தை உண்டு மகிழும். எல்லா உயிர்க்கும் அன்னத்தை தருகிறான் இறைவன் என்பதற்க்காக இந்த நிகழ்வு அமையும்.

நாளை அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகளை தானமாக கொடுங்கள். அந்த பூஜையிலும் கலந்துக்கொள்ளுங்கள். சிவனின் மேனி என்று அழைக்கப்படும் லிங்கம் முழுவதும் அன்னத்தால் காட்சியளிப்பார். காண கண்கோடி வேண்டும். நீங்களும் உங்களின் குடும்ப உறுப்பினர்களும் மற்றும் நண்பர்கள். உங்களுக்கு அருகாமையில் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கும் தெரியப்படுத்துக்கள் அல்லது அழைத்துக்கொண்டு செல்லுங்கள்.

கோவிலுக்கு அரிசி காய்கறிகள் வாங்கிக்கொடுப்பது போல் அன்னதானத்தையும் செய்யுங்கள். உங்களால் முடிந்தளவு உணவை வாங்கிக்கொடுங்கள். ஏழை மக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: