வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகின்றோம். ராகு தசாவில் சந்திரபுத்தி எப்படி பலன் தரும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ராகு தசாவில் சந்திரபுத்தி 18 மாதங்களாகும். சந்திரன் நன்றாக இருந்து பலனை தருகின்றது என்று பார்த்தால் அது எந்தமாதிரியான பலனை தரும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.
அரசனாக மாறுவான் இந்த காலத்தில் அரசனாக எங்கு மாறுவது அந்த ஊருக்கு தலைவராக வருவார் என்று வைத்துக்கொள்ளலாம். நல்ல ஆரோக்கியமாக வாழ்வார். மனநிலையில் மகிழ்ச்சி அடைய செய்வார்.
இரண்டாவது வீட்டில் சந்திரன் சம்பந்தம்பட்டால் தனவரவை பெற்று தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். வீட்டில் புதிய நபர் ஒருவர் உருவாகுவார்.குடும்பத்தில் உறவினர்கள் வருகை தருவார்கள்.
நான்காவது வீட்டில் சந்திரன் அமர்ந்திருந்தால் அவருக்கு வீடுகட்டும் யோகம் வரும். வீடு கட்டவில்லை என்றால் குறைந்தது அவருக்கு ஒரு மனையாவது பெற்று தந்துவிடுவார். வாகனங்கள் வாங்கும் நிலை ஏற்படும். தாய் வழியில் உதவி கிடைக்கும். புதிய நகைகள் வாங்குவீர்கள்.
ஏழாவது வீட்டில் சந்திரன் சம்பந்தப்பட்டால் அவர்க்கு திருமண யோகம் அமையும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்க்கொள்வீர்கள். பயணத்தால் வருமானம் கிடைக்கும்.
ஒன்பதாவது வீட்டில் சந்திரன் சம்பந்தப்பட்டால் ஊரில் மரியாதை தருவார்கள். பெரியோர்கள் உங்களை மதிப்பார்கள். கோவில் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.பெண் தெய்வங்களை வழிபாடு செய்வீர்கள்.
பத்தாவது வீட்டில் சந்திரன் சம்பந்தப்பட்டால் அவர்கள் செய்யும் தொழில் நன்றாக செழிக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். கடல் சம்பந்தப்பட்ட தொழிலாக கூட அது இருக்கும்.
பதினோராவது வீட்டில் சந்திரன் சம்பந்தப்பட்டால் அவருக்கு நல்ல வருமானத்தை பெற்று தந்துவிடுவார். நண்பர்களின் உதவியும் அவர்க்கு கிடைக்கும்.
ராகு தசாவில் சந்திரன் நன்றாக இருக்கும்பட்சத்தில் இந்த நாட்கள் முழுவதும் மனதிற்க்கு சந்தோஷம் தரும் நிகழ்வுகளே அதிகம் நடைபெறும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment