வணக்கம் நண்பர்களே!
ஒரு சிலர் ஜாதகத்தை படிக்கின்றனர். படிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. அப்படியே அது தான் வாழ்க்கை என்று நினைத்துக்கொண்டு இருந்துவிடகூடாது. நமது முயற்சியும் தேவை. ஜாதகம் ஒன்று இருக்கவேண்டும் இருக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. ஜாதகத்தில் அப்படியே என்ன இருக்கின்றதோ அப்படியே இருந்துக்கொண்டு இவர்கள் வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருப்பது மட்டும் சற்று கவலையளிக்கும் விசயமாகவே இருக்கின்றது.
ஜாதகத்தை ஒரு மேப் போல் வைத்துக்கொள்ள வேண்டியது தான் அந்த மேப்பை தினமும் எடுத்து பார்த்துக்கொண்டு இருப்பது தவறான ஒன்று. இன்று சூரியன் அங்கு இருக்கிறார் சந்திரன் இங்கு இருக்கிறார் இப்படி தான் இன்று இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தால் இந்த சமுதாயத்தில் இருந்து நீங்கள் ஒதுக்கிவிடப்பட்டவர் ஆகிவிடுவீர்கள். எல்லாம் கிரகங்களும் இருந்தாலும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கடவுள் பார்ப்பார். நீங்கள் முயற்சி செய்துக்கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் படைத்த கடவுள் மனமிரங்கி வந்து உங்களுக்கு உதவுவார்.
அனைத்து கிரகங்களையும் படைத்த இறைவன் தான் உங்களை படைத்து இருக்கிறார். அந்த கிரகங்களுக்கு உள்ள சக்தியும் உங்களிடம் இருக்கும் அதனை மீறி தான் நீங்கள் செயல்படவேண்டும்.
சோதிடத்தை நம்பாதே என்று சோதிடராக இருந்துக்கொண்டு நான் சொல்லுவது உங்களுக்கு தவறாக தான் தெரியும். தெரிந்தால் தெரிந்துவிட்டு போகின்றது. கடவுள் மேல் பாரத்தை போட்டுவிட்டு நல்லதை செய்வோம் என்று தான் சொல்லுகிறேன்.
கிரகங்கள் எத்தனை தடவை அடித்தாலும் ஒரு காலத்தில் இவன் போய் தொலைக்கிறான் டா என்று உங்களை விட்டுவிடுவார்கள். எது நடந்தாலும் கடவுளிடம் நம்பிக்கை வைத்துவிட்டு செய்யதால் வெற்றி உங்களுக்கு வந்துவிடும்.
எப்பொழுதாவது சோதிடத்தை பாருங்கள் எப்பொழுதும் பார்த்துக்கொண்டு இருந்தால் பிரச்சினை தான் மிஞ்சும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு கிரகம் பிரச்சினை தருவதுபோல் தான் வரும். அதற்க்காக நாம் வாழ்வதை விட்டுவிடகூடாது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
மிக சரியாக சொன்னீர்கள் !
அதோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் , நீங்கள் செயல் படுத்த நினைத்த ஒன்றுக்கு ஜாதகம் ஒன்றி போனால் அதை ஜோராக செய்யுங்கள் அத சமயம் ஜாதகம் வேறுமாதிரி இருந்தால் கடவுளின் பெயரால் முன் யோசனையுடன் செய்யுங்கள் .
வணக்கம் தங்களின் கருத்துக்கு நன்றி
Post a Comment