வணக்கம் நண்பர்களே!
இப்பொழுது ஒரு நண்பர் கேட்டார் சார் ஒரு சில ஜாதகங்களில் தாரதோஷம் என்று சொல்லுகிறார்களே அவர்களுக்கு திருமணம் நடைபெறவே நடைபெறாத என்று கேட்டார்.
தாரதோஷத்திற்க்கு முதலாவதாக செவ்வாய் கிரகத்தை சொன்னாலும் ஏழாவது வீடு பாதிப்படையும்பொழுது இந்த தோஷம் ஏற்படுகிறது. இப்படி பாதிப்படையும்பொழுது நமக்கு வரும் துணைவர் இறக்கநேரிடுவர் அல்லது அவர் இருந்தும் இல்லாமல் இருப்பது போல் தான் இருக்கும். நமக்கு வரும் துணைவர் நமது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு நம்மை இழுத்து செல்வார் என்று எதிர்பார்ப்பார்கள். ஏன் என்றால் அவர்களின் ஜாதகம் நன்றாக இருக்கும்பொழுது நமக்கு அதிர்ஷ்டம் வரும் என்ற நம்பிக்கை.
ஏழாவது வீடு பாதிப்படையும்பொழுது நமக்கு வரும் துணைவர் நமக்கு பிரச்சினையாகிவிடுவார். தாரதோஷம் ஏற்பட்டதால் அவர்களின் வாழ்க்கை பாதிப்படைகிறது. அவர்களுக்கு விடிவு என்ன என்று கேட்பார்கள். அனைவருக்கும் திருமணம் நடைபெறும். என்ன இளமையில் திருமணம் நடைபெறாமல் முப்பத்தி ஐந்து வயதில் திருமணம் நடைபெறும்.
இளமையில் கூட திருமணம் நடைபெற வைக்கமுடியும் தாரதோஷம் ஏற்பட்டவர்கள் நல்ல வழிபாடுகளை பின்பற்ற வேண்டும். ஆன்மீகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கும்பொழுது இளமைகாலத்தில் திருமணம் நடைபெறும். பரிகாரத்தை செய்யவேண்டும். தமிழர்கள் திராவிடத்தை ஆதரிப்பதால் பரிகாரம் எல்லாம் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். நம்பி செய்யும்பொழுது உங்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
உறுப்பினர் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டியதற்கு என் வாழ்த்துக்கள்.
வணக்கம் தங்களின் வாழ்த்திற்க்கு நன்றி
Post a Comment