Followers

Sunday, October 6, 2013

ஆன்மீக அனுபவங்கள் 118


ணக்கம் ண்பர்களே!
                    நான் அம்மனை தனக்கு இஷ்டதெய்வமாக எடுக்கும்பொழுது ஏதோ ஒன்றை எடுக்க போகிறோம் அதனால் நமக்கு எதோ வேண்டினால் நடைபெறும் என்று மட்டும் நினைத்து இருந்தேன். அதனைப் பற்றி எதுவும் அந்தளவுக்கு தெரியாது.

இன்று நமது பூர்வபுண்ணிய பலத்தால் மட்டுமே அது நடக்கிறது. ஒரு அம்மன் நமக்கு என்ன என்ன தேவையோ அனைத்தையும் தேடி செய்கிறது. நான் தூங்கினாலும் அது தூங்காது. என்னை நம்பி வருபவர்களை அது காப்பாற்றுகிறது. எனக்கு பெயர் எடுத்த தரவேண்டும் என்று நினைத்து செய்து தருகிறது.

நான் பல பேர்க்கு செய்துக்கொடுத்து இருந்தாலும் அவர்கள் என்னை மறந்துவிட்டால் அவர்களை விட்டு உடனே என்னிடம் அம்மன் வந்துவிடுகிறது. அவர்கள் அம்மனின் தயவில் மட்டுமே நிற்கிறார்கள். அப்புறம் அவர்களுக்கு பிரச்சினை வந்து மறுபடியும் என்னை தேடி வருகிறார்கள்.

என்னை நாடி ஏன் வருகின்றது என்றால் அந்த அம்மனை எடுக்கும்பொழுதே என்னை அனைத்திலும் காக்கவேண்டும். அதே நேரத்தில் என்னை விட்டு எங்கும் சென்று விடகூடாது என்பதை மட்டுமே அதனிடம் கேட்போம். எனது நலன் மட்டுமே முதல் கடமை. எனது நலனில் அக்கறை காட்டுபவர்களுக்கு அனைத்தையும் செய்துக்கொடுக்கின்றது. 

இது ஒரு சுயநலம் என்றாலும் அம்மன் எடுக்க அப்படி ஒரு தவத்தை செய்து எடுக்கிறோம். அந்த தவம் தான் எங்களின் நலனில் அது காட்டும் ஈடுபாடு. வேறு ஏதும் இல்லை. அதனை எடுக்க தானே வாழ்நாளில் அப்படி ஒரு போராட்டம். இன்று அது கைவசம் இருப்பதால் அதனை வைத்து அனைத்தும் சாதிக்கமுடிகிறது. 

நீங்களும் போராடி ஒரு அம்மனை எடுத்துவிட்டால் போதும். அப்புறம் என்ன அனைத்தும் உங்களை நாடி வந்துவிடும். காலத்தை வீணடிக்காமல் உடனே செயலில் இறங்கி வெற்றி பெறுங்கள்.

யாராவது உங்களுக்கு ஏதாவது ஒரு தெய்வத்தை தருகிறேன் என்று சொன்னால் உடனே காலில் விழுந்து வணங்கி வாங்கிக்கொள்ளுங்கள். இந்த பிறவி எடுத்ததின் அர்த்தம் அப்பொழுது புரியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: