வணக்கம் நண்பர்களே!
நவராத்திரி காலம் என்பதால் அம்மனை பற்றி நான் நிறைய தகவலை உங்களுக்கு தரவேண்டும் என்று நினைத்து இருந்தேன். வேலையின் காரணமாக தரமுடியவில்லை. இப்பொழுது பார்த்துவிடலாம்.
மேல்மலையூனூரில் இருக்கும் நமது அங்காளபரமேஸ்வரியை பற்றி தான் முதலில் சொல்லவேண்டும். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் தாய் அவள். அதுவும் ஏழை மக்களின் இதயத்தில் குடிக்கொண்டு இருப்பவள் அவள். ஏழைகளின் வாழ்க்கைக்கு நம்பிக்கையை விதைப்பவள்.
நீங்கள் அந்த கோவிலுக்கு சென்றாலே தெரியும். நிறைய ஏழைமக்கள் வருவார்கள். ஒருவர் ஏழையாக இருப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். ஒரு மனிதன் ஒன்றும் இல்லாத பொழுது அவனின் பக்தியை பார்த்தாலே நமக்குள் ஏதோ ஒன்று செய்வது போல் தெரியும். அப்படிபட்ட பக்தியை அவன் வைப்பான். அந்த பக்தியை நாம் பார்க்கவேண்டும் என்றால் மேல்மலையூனூர் சென்றால் பார்க்கலாம். அப்படி பக்தியை வைப்பதற்க்கு காரணம் அந்த அம்மனின் சக்தி அப்படிபட்டது.
அம்மனை நாம் பார்க்கும்பொழுதே ஒரு வித பயம் நமக்குள் தோன்றும். சுற்றி புற்று இருக்கும் அதனை பார்க்கவே பயம் அந்த அம்மனின் சக்தி வெளிப்படும் இடமும் அப்படி பயம் கலந்த பக்தியோடு நாம் தரிசனம் செய்யவேண்டும்.
பல வியத்தகு அற்புதங்களை அவள் நடத்திக்கொண்டு இருக்கின்றாள். அம்மனின் சக்தியை பார்த்து வியக்காத மனிதர்களே இல்லை என்று கூட சொல்லலாம். நீங்களும் ஒருமுறை அங்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
அங்கு செல்வது காலை நேரத்தில் செல்லுங்கள். அப்படி இல்லை என்றால் அமாவாசை ஊஞ்சலை பார்க்க செல்லுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment