வணக்கம் நண்பர்களே!
இந்து மக்களின் வாழ்க்கை பண்டிக்கைகளால் நிறைந்த ஒன்று. நான் ஒரு சில நேரத்தில் நினைத்து பார்த்தது உண்டு ஏன் தேவையற்ற பணம் செலவு செய்து பண்டிக்கைகளை கொண்டாடவேண்டும் என்று நினைத்து பார்த்திருக்கிறேன். அது போக போக தான் தெரிந்தது பண்டிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். மகிழ்ச்சி தான் கடவுளின் பிறப்பிடம் என்பது தெரிந்தது.
ஒவ்வொரு நாளும் பணத்திற்க்காக பின்னாடி ஒடினாலும் ஒரு பண்டிகையி்ல் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியோடு கொண்டுவதற்க்கு அந்த காலத்தில் பண்டிகையை வைத்திருப்பார்கள். அதனையே மக்கள் இன்றும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
ஒவ்வொரு மாதத்திலும் ஏதாவது ஒரு பண்டிகை வந்துவிடும். ஆன்மிகத்தில் உயர்நிலையில் எல்லையற்ற ஆனந்தத்தை ஒவ்வொருவரும் உணர்கின்றனர். ஒரு சாதாரணமான மனிதனும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்து மதத்தில் பண்டிக்கையை அதிகமாக வைத்துள்ளனர். அனைவரையும் தன் மகிழ்ச்சியில் வைக்க வேண்டும் என்று கடவுள் வைத்த ஒரு விழாக்கள் தான் ஒவ்வொரு பண்டிக்கையும்.
கடவுள் நமக்கு மகிழ்ச்சியாக இருக்க கொடுத்த ஒவ்வொரு பண்டிக்கையும் நாம் கொண்டாடி நலமுடன் வாழ்ந்து அவனிடம் சரணடைவோம். அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள். குடும்பத்தோடு மகிழ்வோடு கொண்டாடுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment