வணக்கம் நண்பர்களே!
ஆன்மீகத்தில் ஒருத்தர் முன்னேற்றம் அடைவதற்க்கு பல வழிகளைப்பற்றி சொல்லிருந்தாலும் ஒரு வழியைப்பற்றி நான் சொன்னது கிடையாது. அந்த வழியை தான் முதலில் ஒருவர் செய்யவேண்டும் அது நடைபயணம்.
எங்கெங்கு கோவில்கள் இருக்கின்றதோ பிரசித்துபெற்ற கோவில் இருக்கின்றதோ அந்த கோவில்கள் எல்லாம் நடைபயணமாக செல்லவேண்டும். அப்பொழுது தான் ஆன்மீகத்தில் மிகஉயர்ந்த நிலைக்கு நீங்கள் செல்லமுடியும். ஒவ்வொரு ஊருக்கும் நடந்து செல்லும்பொழுது பல விசயங்கள் உங்களுக்கு புலப்படும்.
நான் அதிகமான இடங்களுக்கு நடந்து தான் சென்று இருக்கின்றேன். கனவிலும் நினைத்துகூட பார்க்கமுடியாத இடங்களுக்கு குரு அழைத்துக்கொண்டு சென்று இருக்கிறார். அவரோடு பயணம் செய்யும்பொழுது நம்மால் இப்படி எல்லாம் செல்லமுடியுமா என்று நினைக்க தோன்றும் அவ்வளவு விரைவாக அந்த இடத்தை அடைந்திருப்போம். அது எல்லாம் அவர் செய்யும் செயலால் மட்டுமே நிகழ்ந்த ஒன்று.
திருவண்ணாமலை கிரிவலமும் அப்படிதான் உங்களுக்குள் பலவித மாற்றத்தை ஏற்படுத்த அமைக்கபெற்ற ஒன்று தான் அது. அவர்கள் ஏன் அங்கு நடந்து செல்லவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். ஏதாவது ஒரு வண்டியிலேயே செல்ல சொல்லிருக்கலாமே. நடந்து செல்லும்பொழுது மட்டுமே பல அனுபவங்களை ஆத்மா பெறமுடியும் என்று அப்படி வைத்திருக்கிறார்கள்.
உடம்பை வருத்தி செய்யவேண்டும் என்பது கிடையாது ஆனால் முதல் நிலையில் இருப்பவர்கள் உடலை வருத்தி தான் முன்னேற்றம் அடையமுடியும் என்பதால் உங்களை நடந்து சென்று தரிசித்து வாருங்கள் என்று சொல்லுகிறார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment