வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவில் சந்திரபுத்தியை பற்றி பார்த்து வருகிறோம். சந்திரன் கெட்டால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக இப்பதிவிலும் பார்க்கலாம்.
சந்திரன் ஏழாவது வீட்டில் கெட்டு இருந்தால் துணையாரை வழியில் பிரச்சினை ஏற்படும். அடிக்கடி சண்டை ஏற்படும். கூட்டு தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் கூட்டாளியால் பிரச்சினை ஏற்படும்.
சந்திரன் எட்டாவது வீட்டில் கெட்டு இருந்தால் துணையாரை இழக்கநேரிடும். துணையாரால் அவமானப்பட வேண்டிவரும். பணம் சுத்தமாக வரவே வராது. விபத்துக்கள் ஏற்படும். பூர்வீக சொத்து வில்லங்கத்தை ஏற்படுத்தும்.
சந்திரன் ஒன்பதாவது வீட்டில் கெட்டு இருந்தால் சமுதாயத்தில் அவபெயரை ஏற்படுத்திக்கொடுப்பார். பெரியோர்கள் பிரச்சினையை கொடுப்பார்கள். உயர்கல்வி படிப்பவர்கள் தடங்கல்கள் ஏற்படும். அயல்நாட்டில் வழியாக பிரச்சினையை சந்திக்க வேண்டும்.
பத்தாவது வீட்டில் சந்திரன் கெட்டு இருந்தால் தொழில்கள் பிரச்சினை கொடுக்கும். கர்மவீடு என்பதால் உங்களின் தந்தை மற்றும் தாயாரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவை.
பதினோராவது வீட்டில் சந்திரன் கெட்டுருந்தால் நண்பர்கள் வழியில் பிரச்சினையை ஏற்படுத்திவிடுவார். மூத்த சகோதரிகள் பிரச்சினை கொடுப்பார்கள். லாபத்தில் பிரச்சினையை கொடுக்கும்.
பனிரெண்டாவது வீட்டில் சந்திரன் கெட்டு இருந்தால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிவரும். நீர் சம்பந்தப்பட்ட வியாதியாக அது இருக்கலாம். வீண் செலவு ஏற்படும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment