வணக்கம் நண்பர்களே!
ராகு தசாவில் ஒன்றைச்சொல்ல மறந்துவிட்டேன். ராகுவைப் பொருத்தவரை விஷம் தான் முதலில் செலுத்தும். இரத்தத்தில் விஷத்தை கக்குவது தான் ராகுவின் முதல் வேலையாக இருக்கும். ராகு தசா வந்தாலே அலர்ஜி உடல் எங்கு வந்துவிடும்.
நேற்று கூட ஒருவர் என்னிடம் கேட்டார். ராகுவின் புத்தியில் என்ன நடைபெறும் என்று கேட்டிருந்தார். எந்த தசா நடைபெற்றாலும் ராகு புத்தி நடைபெறும்பொழுது ராகு தசாவின் காரகதுவம் வந்துவிடும். ராகு தசாவில் என்ன என்ன நடைபெறுகிறதோ அத்தனையும் ராகுவின் புத்தியில் நடைபெற்றுவிடும்.
எந்த தசாவாக இருந்தாலும் ராகுவின் புத்தியில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.அப்படி கவனம் செலுத்தினால் வரும் பிரச்சினையை சமாளித்துவிடலாம்.
ராகுவின் தசாவில் வெள்ளை அணுக்களை குறைப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்.வெள்ளை அணுக்களை குறைப்பதால் உடலில் எதிர்சக்தி குறைந்து நோயை ஏற்படுத்துவார். கேன்சர் போன்ற நோய்கள் வருவது கூட ராகுவால் தான் வரும்.
எந்த தசாவாக இருந்தாலும் ராகுவின் புத்தியில் மற்றும் ராகுவின் தசாவில் உடலில் அதிகம் கவனம் செலுத்துவது நல்லது.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
வணக்கம் சார்....
எனக்கு எதுனா ஒரு சித்து கற்றுக்கொள்ள ஆர்வம்...ஒரு பொருளை ஒரு இடத்தில இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவது....இல்லை கை தட்டினால் முட்டை உடைப்பது....அந்தரத்தில் உட்காருவது...வேறு இடத்தில உள்ள பொருட்களை இங்கு இருந்தபடி பார்த்து சொல்வது...போன்று ஏதும் ஒரு சித்து கற்றுக்கொள்ள ஆர்வம்....யாரிடம் கற்று கொள்ளலாம்....யாரும் இப்படி செய்பவர்கள் தற்போது உள்ளார்களா....என்று கூறுங்கள்....
Post a Comment