Followers

Tuesday, October 29, 2013

அம்மன் தரிசனம்


வணக்கம் நண்பர்களே!
                     நேற்று இரவில் இருந்து வக்கிரகாளி அம்மனை பார்க்கவேண்டும் என்று மனதில் ஒரு ஈர்ப்பு இருந்துக்கொண்டே இருந்தது. காலையில் எழுந்தவுடன் நேராக கிளம்பி பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து நேராக திருவக்கரை சென்றேன்.

காலையிலேயே அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது அதன் பிறகு அலங்காரம் செய்து சரியாக 12 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. சரி இதனை பார்க்கதான் என்னை அழைத்திருக்கும் என்று எண்ணி அனைத்தையும் பார்த்துவிட்டு அனைவருக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டேன். உங்களுக்கும் தாங்க. அம்மனை அப்படியே பாரத்துக்கொண்டே இருக்கலாம். என்ன ஒரு சக்தி வெளிப்படுகிறது! என்ன அழகு! 

பண்டிகை காலங்களில் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் கூடுதலாக அம்மனும் உங்களுக்கு அருளை வழங்கினால் கூடுதல் சிறப்பு அல்லவா.அந்த அருள் அனைவருக்கும் கிடைக்க தான் கோவில் சென்று வழிப்பட்டு வந்தேன்.மேலே உள்ள போட்டோவை கொஞ்சநேரம் பாருங்கள். உங்களின் மனதில் அப்படி ஒரு இன்பம் நிலவும்.

பல நண்பர்கள் தீபாவளி அன்று நமது அம்மனுக்கு பூஜை என்று நினைத்துக்கொண்டு கேட்டார்கள். தீபாவளிக்கு பிறகு தான் பூஜை செய்வதாக திட்டமிட்டுள்ளேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: