ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இப்பதிவில் ராகு தசா செவ்வாய் புத்தியை பற்றி பார்க்கலாம்.
ராகு தசா செவ்வாய் புத்தியின் கால அளவு 12 மாதம் 18 நாட்கள்.
செவ்வாய் நன்றாக இருந்து புத்தியை நடத்துகின்றது என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது தரும் பலன்.
செவ்வாய் லக்கினத்தில் சம்பந்தப்பட்டு தசா நடக்கும்பொழுது உடல்நிலையில் நல்ல ஆரோக்கியம். உடலில் புது ரத்தம் உருவாகும். உடலை பார்க்கும்பொழுது ஒரு மாவீரன் போல் தோற்றம் அளிக்கும். விரும்பிய உணவை சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும்.
சுகமான வாழ்க்கை கிடைக்கும். வாகனங்கள் விரும்பி பயணம் செய்வீர்கள். முன்னோர்களின் சொத்துகிடைக்கும். துணையார் வழியில் பணவரவு கிடைக்கும்.ஒரு சிலருக்கு விரும்பிய வரன் அமைத்து தருவார். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
செவ்வாய் இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு புத்தி நடைபெறும்பொழுது. குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதியதாக ஆண் நபர் குடும்பத்திற்க்கு வருவார்கள். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்வு நடைபெறும். அடிக்கடி குடும்பத்திற்க்கு உறவினர் வருவார்கள். அதிகப்பட்சம் உங்களின் சகோதர்கள் வழியில் உறவினர்கள் வருவார்கள்.
செவ்வாய் மூன்றாவது வீட்டில் இருந்தால் இளைய சகோதர சகோதரிகள் வழியாக உங்களுக்கு ஏஜென்சி தொழில் வாய்ப்பை அமைத்து தருவார்கள். அடிக்கடி கனரக வாகனங்களில் சிறிய தொலைவு பயணத்தை ஏற்படுத்திக்கொடுப்பார். செல்போன் வழியாக இனிக்கும் செய்தி வரும்.
நல்ல வேலையாட்கள் அமைவார்கள் எதிர்கள் தொந்தரவு இருக்காது. புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். அந்த தொழிலுக்கு அதிகமான மூதலீடு போடவேண்டிவரும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment