ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். இந்த ராகு தசாவில் அதிகப்பட்சமான ஒரு செயலை செய்யும். அது என்ன என்றால் குடும்பத்தில் காமத்தை கட்டு அவிழ்த்துவிடுவதில் வல்லவராக இருக்கின்றார். ஒரு குடும்பத்தை சிதைக்கவேண்டும் என்றால் காமத்தால் அழிக்கமுடியும் என்பதை தெரிந்துக்கொண்டு ராகு வேலையை காட்டுவார்.
முறையான வழியில் காமம் இருக்கும்பொழுது அது நல்லதை செய்யும். முறை தவறி செல்லும் காமம் குடும்பத்தின் வீழ்ச்சி ஆரம்பிக்கும். பல குடும்பங்களில் ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கின்றது. குடும்பம் சீரழிந்துவிடுகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு ராகு தசா நடைபெற்றாலே அந்த குடும்பம் சீரழிந்துவிடும்.
எப்படியும் அவர்களின் குடும்பம் அவமானத்தை சந்திக்க நேரிடும். ஒருத்தருக்கு ராகு தசா நடக்கும்பொழுதே வீட்டில் இருப்பவர்களுக்கும் அந்த எண்ணத்தை உண்டுபண்ணிவிடுவார். அனைவரும் அதனை நோக்கி சென்றுவிடுவார்கள்.
எப்படி எல்லாம் கற்பனை செய்யமுடியாதோ அப்படி எல்லாம் காம உறவினை ஏற்படுத்திவிடுவார். இப்படி கூட இருக்கின்றார்களா என்று நினைக்க தோன்றும்.
உங்களின் குடும்பத்தில் நீங்கள் தான் தலைவராக இருக்கின்றீர்கள் என்றால் உங்களின் குடும்பத்தில் உள்ள மொத்த ஜாதகத்தையும் பார்த்துக்கொள்வது நல்லது. ஒன்றும் செய்யாது அனைவரும் நல்லவர்கள் தான் என்று நீங்கள் நினைத்தாலும் கிரகங்கள் அவர்களை தாக்கிவிடும். ராகுக்கான தகுந்த பரிகாரத்தை செய்துக்கொள்வது நல்லது.

நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment