வணக்கம் நண்பர்களே!
நாம் எடுத்து வைத்திருக்கின்ற சக்தியை ஒரு இடத்தில் நாம் நிறுத்தி வைக்க வேண்டும் அப்படி வைத்தால் மட்டுமே அந்த சக்தியை தன்வசம் வைக்க முடியும்.
உங்களுக்கு ஒரு அம்மன் அல்லது ஏதோ ஒரு தெய்வம் கிடைக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த தெய்வத்தை நீங்கள் எதாவது ஒரு இடத்தில் நிலை நிறுத்தவேண்டும். கோவில்களிலும் இப்படி தான் சிலையில் நிறுத்தி வைத்திருப்பார்கள். அதனை நாம் தரிசனம் செய்து கும்பிடும்பொழுது நமக்கு அந்த சக்தி கிடைக்கும்.
ஒரு சிலர் தகடு எழுதி அதில் நிலை நிறுத்துவார்கள். ஒரு சிலர் எலுமிச்சை பழத்தில் நிலை நிறுத்துவார்கள். கொஞ்சம் அதிகமாக போய் மனித தலை எழும்புகூடு அல்லது எலும்பில் வைத்திருப்பார்கள். தேவைப்படும்பொழுது அதனை எடுத்து பயன்படுத்துவார்கள். ஏன் இப்படி நிலை நிறுத்துகிறார்கள் என்று பார்க்கலாம்.
இல்லறத்தில் இருந்துக்கொண்டு ஆன்மீகத்தில் இருக்கலாம். எந்த நேரமும் அதனோடு இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. அதனை ஒரு இடத்தில் வைத்துவிட்டு அவர்களின் வேலையை செய்யலாம் அதனால் இப்படி செய்வது உண்டு. தேவை என்று வரும்பொழுது அதனை எடுத்துக்கொள்ளலாம்.
எனது அறையில் நான் ஒரு வித்தியாசமான முறையில் வைத்திருக்கிறேன். அந்த அறைக்கு யாரையும் வெளி நபர்களை அனுமதி கிடையாது. ஒரு திருப்பூர் நண்பர் மட்டும் வந்து இருக்கின்றார். அவர் எனக்கு அதிகமான நெருக்கம் என்பதால் அவரை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.
அந்த அறையில் நான் படுத்து இருந்தாலே போதும் எனக்கு அப்படி ஒரு நிம்மதி கிடைக்கும். எனக்கு ஏதும் பிரச்சினை என்றாலே நேராக ரூம்க்கு சென்று படுத்துவிடுவேன். அப்படி ஒரு நிம்மதியை தந்துவிடும். வெளியில் நான் செல்லும்பொழுது ஒரு சில நேரத்தில் என்னோடு அழைத்துக்கொண்டு செல்வேன்.
வெளியில் எடுத்துச்செல்லும் பொழுது எனது ஆத்மாவில் அதனை ஏற்றிக்கொண்டு செல்வேன். நான் ஏதாவது ஒரு வீட்டுக் சென்றாலே நல்லது நடக்கும் என்பது எல்லாம் தனது ஆத்மாவில் அதனை ஏற்றுவது மட்டுமே. இது எல்லாம் படிக்க பைத்தியகாரதனமாக இருக்கும் ஆனால் அதனை எல்லாம் நீங்கள் உணரும்பொழுது நான் எழுதுவது அனைத்தும் அமிர்தம் போல் இருக்கும்.
வெளியில் எடுத்துச்செல்லும் பொழுது எனது ஆத்மாவில் அதனை ஏற்றிக்கொண்டு செல்வேன். நான் ஏதாவது ஒரு வீட்டுக் சென்றாலே நல்லது நடக்கும் என்பது எல்லாம் தனது ஆத்மாவில் அதனை ஏற்றுவது மட்டுமே. இது எல்லாம் படிக்க பைத்தியகாரதனமாக இருக்கும் ஆனால் அதனை எல்லாம் நீங்கள் உணரும்பொழுது நான் எழுதுவது அனைத்தும் அமிர்தம் போல் இருக்கும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment