வணக்கம்!
சனிகிரகம் ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்படும்பொழுது முன்ஜென்மத்தில் அவர்கள் கிராமத்தில் வசிப்பவர்களாக இருந்திருப்பார்கள். கிராமத்தில் உள்ளவர்களிடம் அதிக பழக்க வழக்கம் இருந்திருக்கும்.
தற்பொழுது இவர்கள் திருமணம் செய்வது கூட கிராமத்தில் இருந்து வந்தவர்களாக இருக்ககூடும். கிராமபுறத்தில் முன்ஜென்மத்தில் கிராமபஞ்சாயத்து தலைவர்களாக அல்லது மக்களுக்கு ஏதாவது ஒரு நன்மை செய்யும் அமைப்பில் இருப்பவர்களாக இருப்பார்கள்.
முன்ஜென்மத்தில் உள்ள வாசத்தால் இந்த ஜென்மத்திலும் அது தொடரும். நகர்புறத்தில் வாழ்ந்தால் கூட இவர்கள் கிராமபுறத்தில் உள்ளவர்களிடம் அதிக விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். ஒரு சில பையன்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்லுவார்கள் நான் கிராமத்தில் உள்ள பெண்ணை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்பார்கள்.
கிராமபுறத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு கல்வி உதவி எல்லாம் செய்வார்கள். பெரும்பாலும் இவர்களின் எண்ணம் தன்குடும்பத்திற்க்காக உழைப்பவர்களாக இருப்பார்கள்.
தன்குடும்பத்தை முன்னேற்றபாதையில் கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்பவர்களாகவும் இருப்பார்கள். தன் குடும்பத்திற்க்காக அனைத்தையும் தியாகம் செய்வார்கள்.
ஒரு சிலர் கிராமபுறத்தில் உள்ள தெய்வங்களை அதிகமாக வணங்குவார்கள். கிராமபுற எல்லை தெய்வங்கள் இவர்களுக்கு குலதெய்வமாக இருக்கும். உங்களுக்கு ஐந்தில் சனி இருந்தால் முன்ஜென்மத்தில் உள்ள பிரச்சினைகளை போக்குவதற்க்கு கிராமபுறத்தை நாடி அங்குள்ள மக்களுக்கு நல்லது செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Sir,
Write about moon in fifth house.
Post a Comment