Followers

Tuesday, June 27, 2017

செவ்வாய்


வணக்கம்!
         செவ்வாய் ஒரு சண்டைபோடும் கிரகம் என்பது உங்களுக்கு தெரியும். செவ்வாய் கிரகம் ஒருவரின் வாழ்வில் நிறைய பிரச்சினைகளை கிளப்பிவிடும் ஆனால் அது தான் நமக்கு பிரச்சினை கொடுக்கிறது என்பது நமக்கு தெரியாமல் போய்விடும்.

எப்பொழுது உங்களின் வாய் சும்மா இருக்காமல் ஏதாவது பேசி உங்களின் வீட்டில் அல்லது அடுத்தவர்களோடு சண்டை வருகிறதோ அப்பொழுது உங்களுக்கு செவ்வாய்கிரகம் சரியாக இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள்.

நம்முடைய வாழ்வில் நிறைய வாயை கொடுத்து சண்டையில் மாட்டிக்கொண்டு தான் அதிகமாக இருக்கும். இதற்கு செவ்வாய் சரியில்லை என்று தான் நாம் அர்த்தம் கொள்ளவேண்டும். செவ்வாய்கிரகம் தன்னுடைய கோச்சாரரீதியாக சுற்றிலும் இப்படி தான் செய்கிறது.

செவ்வாய்கிரகம் அமைதியாக கூட வேலை பார்த்துவிடுவதும் உண்டு. சம்பந்தமே இல்லாமல் அடுத்தவர் மீது கோபம் கொண்டு அவர்களை தவிர்த்துவிடுவதும் உண்டு. ஏதோ ஒரு காரணத்தால் அடுத்தவர் மீது கோபம் கொள்ளும்பொழுது அது நம்முடைய வாழ்வில் பல நல்ல சந்தர்ப்பங்களை நழுவவும் செய்வது உண்டு.

உங்களுக்கு எப்பொழுது எல்லாம் கோபம் வருகின்றதோ அப்பொழுது செவ்வாய் சரியில்லை என்று நினைத்துக்கொள்ளுங்கள். கோபத்திற்க்கு மாறாக அமைதியை காட்டுங்கள் முடிந்தால் எப்பொழுது அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கையில் செவ்வாய்கிரகத்தின் பாதிப்பு வரவே வராது.

இன்று காலை மதுரை வரை செல்கிறேன். மதுரையில் இருந்து வந்தவுடன் நிறைய பதிவுகளை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: