Followers

Friday, June 9, 2017

வெள்ளிக்கிழமை


வணக்கம்!
          சுக்கிரனுக்கு உகந்த நாள் வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை எல்லா கோவிலும் விஷேசமாக இருக்கும். வெள்ளிக்கிழமை அன்று வெள்ளை ஆடை உடுத்தி வந்தால் உங்களுக்கு நல்ல செல்வவளம் கிடைக்கும் என்று சொல்லிருந்தேன்.

வெள்ளை உடையை உடுத்த பெண்கள் தயங்கினால் அவர்கள் பட்டுச்சேலையை உடுத்திக்கொள்ளலாம். அதோடு அன்று நல்ல மணம் தரும் பூக்களையும் சூடிக்கொள்ளலாம். எப்பொழுதும் நெற்றியில் திலகம் வைத்தாலும். வெள்ளிக்கிழமை அன்று சந்தனத்தை பயன்படுத்தலாம்.

குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை என்றாலும் அந்த நாளிலில் அவ்வளவு சிறப்பாக எந்த கோவிலிலும் வழிபாடு செய்வதில்லை. வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு உகந்த நாளிலில் தான் வழிபாடு செய்கிறார்கள். சுக்கிரனின் மகிமை அந்தளவுக்கு பெரியது.

வெள்ளிக்கிழமையில் கிராமதெய்வங்களுக்கு அல்லது உங்களின் குலதெய்வத்திற்க்கும் வழிபாடு செய்யலாம். இதனை அனைவரும் செய்து வந்தாலும் மறுமுறையும் உங்களுக்கு செல்வதற்க்கு காரணம் வெள்ளிக்கிழமை அம்மனுக்கும் உகந்தநாள் நல்ல மகிழ்ச்சியாக அம்மன் இருக்கும். நீங்கள் கேட்டதை தரும் என்பதால் வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு முக்கியமானதாக இருக்கின்றது.

வெள்ளிக்கிழமை அன்று காளிதேவியை தொடர்ந்து வழிபட்டு வந்தால் உங்களின் வாழ்வில் மற்றும் உங்களின் வாரிசு வாழ்விலும்  நிறைய நன்மை வந்து சேரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: