வணக்கம்!
முன்ஜென்மத்தைப்பற்றி ஒரு சில கருத்துக்களை சொல்லிருந்தேன். தொடர்ந்து அனைத்தையும் இனி பார்த்துவிடலாம். புதன் ஐந்தாவது வீட்டில் தொடர்புக்கொண்டால் முன்ஜென்மத்திலும் நல்ல வணிகராக இருந்திருப்பார்.
முன்ஜென்மத்தில் வணிகராக இருந்திருந்தாலும் அதில் ஒரு முடிவு பெறாத ஆசைகள் இருந்திருக்கும் அதனை பூர்த்தி செய்ய இந்த ஜென்மத்தில் பிறந்து தற்பொழுதும் இவர்கள் வணிகராக இருப்பார்கள். ஒரு சில ஆடிட்டர்கள் ஐந்தில் புதன் இருக்கும்பொழுது தான் நல்ல ஆடிட்டர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.
ஒரு சிலருக்கு இந்த பிறவியில் வணிகராக இருந்து சாதிக்கமுடியவில்லை என்பவர்கள் முன்ஜென்மத்தில் வணிகராக இருந்து அதனை ஒழுங்காக செய்யாமல் அதில் இருந்து பல பிரச்சினைகளை அடுத்தவர்களுக்கு செய்த காரணத்தால் இந்த ஜென்மத்திலும் வணிகராக பிறந்து கஷ்டப்படுவார்கள்.
உங்களின் வியாபாரம் நடைபெறவில்லை என்றால் தற்பொழுது செய்யும் வியாபாரத்தில் ஒழுங்காக நேர்மையாக வியாபாரம் செய்தால் அது சரிசெய்யப்பட்டுவிடும். ஒரு மாத காலம் செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் எதிர்பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு மாமன் வகையில் பிரச்சினை இருக்கும். மாமனுக்கு முன்ஜென்மத்தில் ஏமாற்றியதால் அல்லது அவர்களுக்கு பிரச்சினை கொடுத்த காரணத்தாலும் இந்த பிறவியில் புதன் ஐந்தாவது வீட்டிலும் சம்பந்தப்படலாம்.
உங்களின் மாமன் வகையில் இருப்பவர்களுக்கு நீங்கள் உதவி செய்யலாம். மாமன் வகையில் உள்ளவர்களிடம் அன்போடு நடந்தால் பிரச்சனையை சமாளிக்கலாம். ஒரு சிலருக்கு திருமணம் தள்ளி போவதற்க்கு கூட இந்த பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கலாம். நன்றாக சிந்தித்து இதனை முடிவு செய்யுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment