Followers

Thursday, June 1, 2017

இனிய தொடக்கம்


வணக்கம்!
          மதுரையில் இருந்து நேற்று இரவே வந்துவிட்டேன். மாந்தி பரிகாரம் என்பதால் இரவே வந்து சேர்ந்துவிட்டேன். காலையில் மாந்தி பரிகாரம் செய்திருக்கிறேன். நம்ம ஆளுங்க அவகாசம் எல்லாம் கொடுத்தால் தான் தானமே செய்கின்றார்கள்.

நான் அடுத்தவரை முன்னேற்றம் அடைய என்ன வழி என்பதை எல்லாம் ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். ஆரம்பகட்ட நாள் முதல் இன்று வரை ஒன்றை மட்டும் செய்யவேண்டாம் என்று சொல்லுவேன். அது நீங்கள் சோதிடதொழில் அல்லது ஆன்மீகசம்பந்தப்பட்ட தொழிலை செய்யாதீர்கள் என்று சொல்லுவேன்.

எனக்கு போட்டியாக இதனை செய்யவேண்டாம் என்று சொல்லுவதாக நினைத்துக்கொள்ளவேண்டாம். அடுத்தவர்களின் கர்மாவை நீங்கள் வாங்கவே கூடாது என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். 

உங்களை மட்டும் சரி செய்துக்கொண்டு உங்களை மேம்படுத்திக்கொண்டு நன்றாக வாழுங்கள். அடுத்தவர்களின் ஜாதகத்தை தொடவேண்டாம். தொழிலிலே இல்லை என்றாலும் சும்மா இருங்கள் ஒரு நல்ல தொழில் உங்களுக்கு கிடைக்கும். இந்த தொழில் மட்டும் வேண்டாம். 

நீங்கள் மட்டும் செய்கின்றீர்களே என்று கேட்கலாம். உலகத்தில் உள்ள அனைத்து வேலையையும் செய்துவிட்டு எதுவும் எனக்கு சரிவரவில்லை. என்னுடைய விதி இது என்பதற்க்காக இதனை செய்கிறேன். மிகவும் விருப்பட்டு தற்பொழுது இதனை செய்கிறேன். நிறைய நல்லவிசங்களை உங்களுக்கு சொல்லிருக்கிறேன். அதோடு இதனையும் சேர்த்து சொல்லுகிறேன். அடுத்தவர்களின் பிரச்சினை உங்களுக்கு வேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: