Followers

Tuesday, June 6, 2017

கன்னி தெய்வம்


வணக்கம்!
          நண்பர் ஒரு கேள்வி கேட்டுருந்தார். அவரின் கேள்வியை அப்படியே கொடுத்துருக்கிறேன். அதற்கான பதில் கீழே உள்ளது.

அன்புள்ள ராஜேஷ் சுப்பு அவர்களுக்கு,
                     எனது பெயர் M.செந்தில்குமார், மதுரையில் இருக்கின்றேன். ஒரு பெரிய வேண்டுகோள். கன்னி தெய்வத்தை பற்றி ஒரு பதிவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதாவது ஒவ்வொரு வீட்டிலும் கன்னி தெய்வம் (சிறு வயதில் மாண்டு இறந்துபோன கன்னியை நினைத்து வழிபடுதல்) இருக்கின்றது. இதுவும் ஒரு சக்தியின் வழிபாடுதானே ராஜேஷ்? அந்த கன்னி தெய்வம் உத்தரவு கொடுத்தால் தான் பெட்டி வைத்து கும்பிடவேண்டுமா ராஜேஷ்?. கொஞ்சம் விரிவாக விளக்கம் ஜாதக கதம்பத்தில் பதிவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பதில்

ஒவ்வொரு வீட்டிலும் கன்னி தெய்வம் இருக்கும். கன்னி தெய்வம் நம்முடைய முன்னோர்கள் இளம் வயதில் இறந்து அவர்கள் தெய்வமாக மாறிவிடுவார்கள். தெய்வபிறப்பாக அது இருக்கும். அவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக இறந்து அவர்கள் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு வழிகாட்டியாக இருப்பார்கள்.

நல்லது கெட்டது அனைத்தையும் தெரிவித்துக்கொண்டு இருப்பார்கள். அதன் படி அந்த குடும்பத்தை வீட்டில் உள்ளவர்கள் வழிநடத்துவார்கள். அவர்கள் தங்களுக்கு வழிநடத்தும் கன்னிதெய்வத்திற்க்கு முதல் மரியாதை செலுத்திய பிறகு அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் செய்வார்கள்.

குலதெய்வ வழிபாட்டில் கூட முதலில் கன்னி தெய்வத்திற்க்கு மரியாதை செலுத்திய பிறகு தான் குலதெய்வ வழிபாட்டிற்க்கு செல்வார்கள். குலதெய்வத்திற்க்கு தேவையான பொருட்களை ஒரு பெட்டியில் வைத்து அந்த பெட்டியை கன்னி தெய்வத்திற்க்கு முன் வைத்து அதனை சாமி கும்பிட்டு அதன் பிறகு குலதெய்வ கோவிலுக்கு அந்த பெட்டி சென்று அங்கு குலதெய்வ விழா நடக்கும்.

பல குடும்பங்களி்ல் இது வழக்கமாக நடக்கும். பல இடங்களின் நான் அனுபவ பூர்வமாக இதனை பார்த்து இருக்கிறேன். பெரும்பாலும் கன்னி தெய்வம் இல்லாமல் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இல்லை என்பது பாேல தான் நினைக்கிறேன். 

கன்னி தெய்வம் உத்தரவு கொடுத்தபிறகு அங்கிருந்து பெட்டியை எடுத்துக்கொண்டு செல்வார்கள். தற்பொழுது ஒழுங்காக சாமி ஆடாதவர்கள் இருப்பதால் கன்னி தெய்வத்திடம் பெட்டியை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு சென்றாலே போதுமான ஒன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: