வணக்கம்!
ஐந்தாவது வீடு என்பது பல விதத்திலும் அதிக பயனை கொடுக்ககூடிய ஒன்று. இந்த வீட்டில் உள்ள காரத்துவம் வெளிப்படுத்துவதை வைத்து தான் அடுத்த வீட்டிற்க்கு எல்லாம் வேலையே இருக்கின்றது என்று சொல்லலாம்.
முன்ஜென்மத்தில் எப்படி எல்லாம் நாம் இருந்தோம் அதற்கு இந்த பிறவியில் நமக்கு கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகளை சொல்லும் வீடாக இது இருக்கின்றது. ஒரு சிலருக்கு முற்பிறவியில் செய்த நன்மை கூட தடைப்பட்டு கிடக்கும். அதாவது இந்த பிறவியில் கிடைக்காமல் அடுத்த பிறவியில் இதனை கொடுக்கலாம் என்று இருக்கும்.
இதனை எல்லாம் கருத்தில் கொண்டு தான் பரிகாரம் செய்வதற்க்கு முன்பே பல நன்மைகளை செய்துவிட்டு பரிகாரம் செய்ய தொடங்குகிறோம். நம்முடைய நன்மையை செய்துவிட்டால் அது இந்த பிறவியில் கிடைத்தாலும் கிடைக்கட்டும் அல்லது அடுத்தபிறவிக்கும் இது கிடைக்கட்டும் என்று செய்ய சொல்லிருக்கிறார்கள்.
குலதெய்வத்தின் அருளை நாம் பெறவேண்டும் என்றால் இந்த வீட்டை நாம் பலப்படுத்தும்பொழுது நமக்கு அது கிடைக்கும். கண்டிப்பாக குலதெய்வத்தின் அருளை நமக்கு தங்கு தடையின்றி கிடைக்க வழி செய்யவேண்டும்.
ஒரு சிலருக்கு பித்ருதோஷம் என்ற ஒன்று ஏற்படுவதற்க்கு இந்த வீட்டை வைத்தும் அலசப்படும். பித்ருதோஷத்திற்க்கு நீங்கள் தான் பரிகாரம் செய்யவேண்டும் என்றாலும் ஒரு சிலவற்றை பொதுவாக செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment