வணக்கம்!
வெள்ளிக்கிழமை அன்று உங்களின் வீட்டில் தாமரைபூவை வைத்து உங்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை வணங்குங்கள். உங்களின் வீட்டில் எப்பொழுதும் லட்சுமி கடாட்ஷம் இருக்கும்.
உங்களின் தெய்வத்தை வணங்கினால் போதும் அதாவது உங்களின் தெய்வமுமே லட்சுமியாக இருந்து உங்களுக்கு நல்லதை செய்துக்கொடுக்கும். வீட்டில் பூஜையறையில் தாமரைப்பூவை வைத்து வணங்கினால் போதுமானது.
உங்களின் குலதெய்வம் ஒரு ஆண் தெய்வமாக இருந்தால் அந்த இடத்தில் ஒரு பெண் தெய்வமும் இருக்கும். எப்படிப்பட்ட ஆண் தெய்வமாக இருந்தாலும் அந்த இடத்தில் ஒரு பெண் தெய்வம் இல்லாமல் இருக்காது.
உங்களின் வீட்டில் தாமரைபூவை வைத்து பூஜை செய்யும்பொழுது உங்களின் வீட்டில் அனைத்து செல்வங்களும் தடை இன்றி கிடைக்கும். வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் இதனை செய்ய தொடங்குங்கள்.
தமிழ்நாட்டில் பெரும்பாலும் குளத்தில் தண்ணீர் இல்லை. தாமரைப்பூவும் இல்லை. கடைகளில் கிடைக்கின்ற பூவை வாங்கி வந்து பூஜை செய்யுங்கள். ஒரு பூ மட்டும் வைக்காமல் குறைந்தது ஒரு நான்கு பூ வாங்கி வந்து பூஜை அலங்கரியுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment