வணக்கம்!
சனிப்பெயர்ச்சி என்பது ஒரு அனுபவமாக தான் நான் தற்பொழுது வெளியிட்டு இருக்கிறேன். பலர்க்கு தற்பொழுது பிரச்சினை வந்ததின் காரணமாக இதனை எழுதுகிறேன். சனிப்பெயர்ச்சிக்கு பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறேன்.
சனி ஒரு நல்ல கிரகம் என்பது எனது திடமான நம்பிக்கை. சனி இல்லை என்றால் வாழ்வே இல்லை என்று தான் அர்த்தம். சனிக்கிரகம் தன்னுடைய மறைவுகாலத்தில் அல்லது சிக்கலான நேரத்தில் சனியின் சக்தி மனிதனுக்கு கிடைப்பதில்லை.
சனி கிரகத்தின் சக்தி கிடைப்பதில்லை என்பதற்க்காக தான் மனிதன் பலவிதத்திலும் சிக்கலில் சிக்குகிறார்கள். சனிக்கிரகத்தின் சக்தியை நீங்கள் எடுக்கும் வழியில் முயன்றால் உங்களின் பிரச்சினை தீர்ந்துவிடும்.
சனிக்கு பரிகாரம் செய்யமுடியவில்லை அதற்கு போதுமான பணம் வசதி இல்லை என்பவர்கள். வாரந்தோறும் சனிக்கிழமை அன்று நவகிரகத்தில் உள்ள சனியை சென்று பார்த்துவிட்டு வணங்கி வாருங்கள்.
தொடர்ச்சியாக இதனை செய்யவேண்டும். ஏதோ ஒரு வாரம் மட்டும் சென்றுவிட்டு அதன்பிறகு அந்த பக்கத்தில் தலைவைத்து கூட பார்க்காமல் இருந்தால் உங்களுக்கு பிரச்சினை தீராது என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment