Followers

Friday, June 16, 2017

முன்ஜென்மம்


வணக்கம்!
          ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சம்பந்தப்பட்டால் அவர்கள் முன்ஜென்மத்தில் அதிகப்பட்சம் பெண்களாக பிறந்திருக்க வாய்ப்பு இருக்கும். தற்பொழுது அவர்கள் பெண்களின் ஒத்த நடவடிக்கையில் இருப்பார்கள். 

ஒரு சிலர் தற்சமயம் பெண்களுக்கான துறையில் தற்பொழுது வேலை செய்துக்கொண்டு இருப்பதற்க்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். தொழில் என்றால் நாம் பத்தாவது வீட்டை தான் வைத்து சொல்லுவோம் ஒரு சிலரின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் சுக்கிரன் பார்வை பட்டால் அவர்கள் சுக்கிரன் சம்பந்தப்பட்ட தொழிலில் வேலை செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கும்.

இவர்கள் பெண்கள் போல நடவடிக்கையும் இருக்கும். முன்ஜென்மத்தில் உள்ள அந்த காரத்துவத்தை அப்படியே இந்த ஜென்மத்திலும் வெளிப்படுத்துவார்கள். நடப்பது பேசுவது வெட்கப்படுவது போன்றவற்றை நன்றாக கவனித்து பாருங்கள். அதே போல தான் இருப்பார்கள்.

உங்களுக்கு ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் இருந்து அல்லது சுக்கிரனின் பார்வை இருந்தால் இப்படி தான் இருக்கும். சரி இதனை நாம் அறிந்து என்ன செய்வது என்று கேட்கிறீர்களா.

உங்களுக்கு ஏதாே ஒரு பிரச்சினை வருகின்றது என்று வைத்துக்கொள்வோம். தற்சமயம் இப்படிப்பட்ட பிரச்சினை வருகின்றது என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் செய்ய வேண்டியது இது தான். 

உங்களின் ஊரில் இருக்கும் பெண்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யலாம். இது ஒரு சின்ன பரிகாரம் போல் தான் சொல்லுகிறேன். உங்களுக்கு முடிந்ததை அவர்களுக்கு செய்து பாருங்கள். 

உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு நல்ல உதவி அவர்களுக்கு பயன்படும் விதத்தில் செய்தால் முன்ஜென்மத்தில் உள்ள அத்தனை புண்ணியத்தையும் இந்த ஜென்மத்தில் பெற்று நீங்கள் நன்றாக வாழமுடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: