வணக்கம்!
உங்களின் ஜாதகத்தில் ஐந்தில் சந்திரன் நின்றால் அல்லது சம்பந்தப்பட்டால் சாதகமான நிலையில்
முன்ஜென்மத்தில் புண்ணியம் செய்திருந்தால் சந்திரன் உங்களுக்கு கொடுப்பது.
வாழ்வு முழுவதும் சேவை செய்யக்கூடிய மனநிலையில் இருந்திருப்பீர்கள். உண்மையை மட்டும் பேச வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். தாய்வழியில் நல்ல உதவி தாய் நலமுடன் நீண்டநாள்கள் வாழ்வது. காதல் மணம் புரிவதில் அதிக ஈடுபாடு நிலம் வாங்க நீங்க நினைத்தால் எளிதாக அந்த நிலம் உங்களுக்கு அமைவது.
முன்ஜென்மத்தில் பாவம் செய்திருந்தால் சந்திரன் உங்களுக்கு கொடுப்பது
சந்திரன் பாதகமாக உங்களுக்கு அமைந்தால் காதல் ஏற்பட்டு அந்த காதல் கைகூடாமல் இருப்பது. திருமணம் செய்து உங்களின் திருமண பந்தம் முறிவு பெற்றுவிட்டது. உங்களின் தாய் நலம் கெடுதல் மனகுழப்பத்தில் இருப்பது.
உடல் பருமன் வியாதியால் அல்லல் படுவது. மனைவி தொழில் செய்கிறேன் என்று உங்களின் பணத்தை எல்லாம் வீண் செய்வது குலதெய்வ வழிபாட்டால் எந்த பலனும் கிடைக்காமல் போவது இது எல்லாம் பாவகணக்கில் வரும்.
முன்ஜென்மத்தில் சிவன் கோவிலுக்கு பாதகமாக நீங்கள் நடந்திருந்தால் பாவமான செயல் உங்களுக்கு நடக்கும் முன்ஜென்மத்தில் சிவன் கோவிலுக்கு நல்லது செய்திருந்தால் நல்லது நடக்கும்.
கோவிலுக்கு பிரச்சினை கொடுத்த காரணத்தால் தான் அதிகமாக உங்களுக்கு இந்த ஜென்மத்தில் பிரச்சினை இருக்கும். உங்களின் பிறந்த ஊருக்கு அருகில் அந்த கோவில் தற்பொழுது இருக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment