வணக்கம்!
சனிக்கிரகம் கொடுக்கும் ஒரு பொறுமையான குணம் வேறு எந்த கிரகமும் கொடுப்பதில்லை. குரு கிரகம் பொறுமையான குணத்தை கொடுக்கும் என்று சொல்லுவார்கள் ஆனால் அதனை விட சனிக்கிரகம் அதிக பொறுமை குணத்தை கொடுக்கும்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். பொறுமையாக இருந்தால் அவனை இந்த மக்கள் பல விதத்திலும் சூடுப்படுத்தி கிளப்பிவிடுவார்கள். அதற்கு எல்லாம் அவன் மயங்காமல் தன்னிடத்தில் அதிக பொறுமையாக இருப்பான்.
பொறுமை அந்த பொறுமைக்கு பொறுமையாக அதாவது அதிக அமைதியாக ஒரு செயலை கையாளும் திறமையை ஒருவனுக்கு கொடுப்பது சனிக்கிரகம் தான் கொடுக்கும்.
நம்ம ஆளுங்க ஒன்றை சொல்லுவார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பார்கள். எல்லை எல்லாம் கிடையாது அது பொறுமையாக இருப்பது மட்டுமே அதன் எல்லை. எந்த சூழ்நிலையிலும் பொறுமையாக செயல்படுவனுக்கு எல்லாம் அவனின் வாழ்க்கையிலேயே கிடைத்துவிடுகிறது.
சனிக்கிரகம் சோம்பேறியை தான் கொடுக்கிறது என்று பலர் சொல்லுவார்கள். சோம்பேறியை ஒரு சிலருக்கு கொடுத்தாலும் அது அமைதியை தான் அதிகம் கொடுக்கிறது என்பது அனுபவத்தில் உண்மை.
செவ்வாய் கிரகம் என்ன செய்யும் என்றால் இந்த சனிக்கிரகத்து ஆளுங்களை அதிகம் சீண்டி பார்க்கும். அதற்கு பதிலடியாக சனிக்கிரகம் அந்த ஆளுங்களை வாழவைத்து எதிராளிக்கு தக்க பதிலடியை கொடுத்துவிடும். பொறுமையாக இருக்கவேண்டும் என்றால் சனிக்கிரகத்தின் காரத்துவத்தை பயன்படுத்தினால் நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment