வணக்கம்!
எனக்கு உடல்ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்லுவது உண்டு. மருத்துவரிடம் ஏன் செல்லவேண்டும் நாமே நம்மை காத்துக்கொள்ளகூடாது என்றால் கண்டிப்பாக மருத்துவரிடம் தான் செல்லவேண்டும்.
இன்றைய காலத்தில் நிறைய பேர்களுக்கு உடல் ரீதியாக பிரச்சினை வருவதற்க்கும் மருத்துவர்களும் ஒரு காரணம். அவர்களின் தேவையை தீர்க்க கடவுள் இப்படி நம்மை அங்கு செல்ல வைத்துவிடுவார். மருத்துவர்களின் மனநிலை எப்படி இருக்கும் நம்மை தேடி நிறைய நோயாளி வரவேண்டும் என்று இருக்கும். இந்த மனநிலை நம்மை அங்கு நோக்கி இழுக்க வைக்கும்.
நேராக நாம் மருத்தவமனைக்கு சென்று அமர்ந்தாலே ஐம்பது சதவீத நோய் போய்விட்டதாக நமக்கு தோன்றும். அவர்களுக்கு தேவையான பணத்தை கட்டிய உடன் நமக்கு நோய் போய்விட்டதாகவே தோன்றும்.
எனக்கு மருத்துவசெலவு இவ்வளவு செய்யவேண்டும் என்று கடவுள் நமது விதியில் எழுதியிருப்பார். அதனை நான் கொண்டு அவர்களிடம் சேர்க்கும் பொழுது தான் நம்முடைய கணக்கு நமக்கு தீரும்.
இன்றைக்கு உலகம் இயங்குவதற்கு காரணமாக இருப்பது உலகத்தில் உள்ள அனைவரின் கணக்கை தீர்க்க கடவுள் செய்யும் ஒரு ஏற்பாடாக இருக்கும். இது நமக்கு தேவையில்லை என்று எதையும் ஒதுக்கிவைத்துவிட முடியாது. அனைத்திலும் கொஞ்சம் நாம் விரையம் செய்துதான் ஆகவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment