வணக்கம்!
ஏதோ ஒரு பிரச்சினைக்கு கோவிலுக்கு சென்று வரவேண்டும் உங்களின் சோதிடர்கள் அல்லது ஆன்மீகவாதிகள் சொன்னால் நீங்கள் தனியாக சென்று வருவதைவிட உங்களுக்கு தெரிந்த ஆன்மீகவாதிகளோடு சென்று வருவது நன்றாக இருக்கும்.
நான் தனியாக கோவிலுக்கு செல்வதற்க்கும் எனது குருவோடு கோவிலுக்கு செல்வதற்க்கும் வித்தியாசம் இருக்கின்றது. ஒரு கோவிலுக்கு பலமுறை சென்று இருக்கிறேன் ஆனால் அந்த கோவிலுக்கு எனது குருவோடு செல்லும்பொழுது நடக்கும் விதமே வேறு மாதிரியாக இருக்கும்.
சக்தி படைத்தவனோடு கோவிலுக்கு செல்லும்பொழுது அதன் சக்தி வேறு லெவல் என்பதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அதனால் தான் உங்களிடம் ஆன்மீகவாதிகளோடு சென்று வாருங்கள் என்று சொல்லுகிறேன்.
இப்படி பதிவில் சொல்லிவிட்டால் என்னை இலவசமாக அனைத்து கோவிலுக்கும் அழைத்துக்கொண்டு செல்வார்கள் என்பதற்காக இதனை சொல்லவில்லை. உங்களை எல்லாம் நான் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக எனக்கு அந்த வேலையை மட்டும் தான் செய்யமுடியும் வேறு எந்த வேலையும் செய்யமுடியாது.
உங்களிடம் சொல்லுவது உங்களுக்கு தெரிந்த குரு உங்களுக்கு அருகில் இருந்தால் அவரை அழைத்துக்கொண்டு நல்ல சக்தியை நீங்கள் பெறவேண்டும் என்பதற்காக தான் சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment