வணக்கம்!
நாளை சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி. கடன்கள் அடைக்க பைரவரை வழிபடவேண்டும் என்று நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். அதாவது அவர் கோவில் சென்று வழிபடவேண்டும் அங்கு பைரவருக்கு நடைபெறும் பூஜையில் கலந்துக்கொள்ளவேண்டும் என்றார்.
உண்மையில் சொன்னவருக்கு கடன் இல்லை என்பது தான் உண்மை. அவர் எனக்கு நன்கு தெரிந்தவர். நல்ல செல்வந்தர். அவர் சொன்னது தான் எனக்கு வியப்பாக இருந்தது. பைரவர் கோவிலை காப்பாற்றுவதை விட்டுவிட்டு தற்பொழுது ஒவ்வொருவரின் கடன்களை அடைத்துக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கிறேன்.
பைரவழிபாடு செய்வது தவறு என்று சொல்லவில்லை. நம்ம மக்கள் சொல்லும் கருத்து தான் பல விதத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. பொதுவாக நீங்கள் கடன் தீரவேண்டும் என்று ஒரு தெய்வத்திடம் அதாவது கோவிலுக்கு சென்று அங்கு பூஜை செய்தால் அந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு நல்ல அறிவை கொடுத்து ஒரு தெளிவு உண்டாகும். கடன்களை நீங்கள் உழைத்து தான் கட்டவேண்டும்.
பைரவரை வணங்கினால் கூட அந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருந்து உங்களின் மனதிற்க்குள் வரும் தெளிவை நன்றாக கவனியுங்கள். அதாவது பொறுமையாக உங்களின் மனதில் இருந்து வரும் கஷ்டத்தை நினைத்து கவலைப்படாமல் என்ன தெளிவு கிடைக்கிறது என்பதை மட்டும் கவனித்தால் போதும். இது எல்லாம் கஷ்டமாக இருக்கின்றது என்று நீங்கள் நினைத்தால் பொறுமையாக சாமியை கும்பிட்டுவிட்டு வாருங்கள் அதுபோதுமானது.
பழைய பதிவில் சொன்னபடி உங்களின் ஊருக்கு அருகில் அல்லது எந்த ஊராக இருந்தாலும் சரி தாழ்த்தப்பட்டவர்கள் கட்டிய பைரவராக பார்த்து சாமிகும்பிட்டால் நல்ல பலன் உங்களுக்கு உடனே கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment