Followers

Monday, October 21, 2013

ராகு தசா பலன்கள் பகுதி 59

வணக்கம் நண்பர்களே!

                    ராகு தசாவைப்பற்றி பார்த்து வருகிறோம். ஒரு ஜாதகத்தோடு ராகு தசாவைப்பற்றி பார்க்கலாம்.




இந்த ஜாதகம் ஒரு ஆண் மகனின் ஜாதகம். மகர லக்கினம் மேஷ ராசி. குரு சுக்கிரன் மற்றும் சூரியனோடு சேர்ந்து இரண்டாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். சனியும் செவ்வாயும் நேர் பார்வையில் இருக்கின்றனர். 

ராகு அனுஷம் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார். சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்.அமர்ந்திருக்கும் வீடு செவ்வாயின் வீடு. சனி செவ்வாய் இருவருக்கும் பார்வை இருப்பதால் ராகு தசா அந்தளவுக்கு இவருக்கு அதிக நன்மையை செய்துவிடாது.

ராகு லாபத்தில் தான் இருக்கின்றது என்றாலும் அமர்ந்த இடம் அந்தளவுக்கு அதிகபலனை வழங்காது. இவருக்கு வழங்கவும் இல்லை. லக்கினாதிபதியின் நிலையும் சரியில்லை என்றே சொல்லவேண்டும் ஆறாவது வீட்டிற்க்கு சென்றுவிட்டார்.

இவருக்கு ராகு தசா ஆரம்பித்த வருடத்தில் சரியான ஒரு ஏற்றத்தை கொடுத்தது. ராகு தசாவின் சுயபுத்தியில் நல்ல முன்னேற்றம் என்றே சொல்லவேண்டும். 2008 யில் இருந்து 2010  வது வருடம் வரை மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுத்தது. 

ராகுவின் சுயபுத்தியால் நல்லது நடந்தது. எப்பொழுது குரு புத்தி ஆரம்பித்ததோ அன்று முதல் இவருக்கு பலவிதத்திலும் சம்பாதித்த பணத்தை இழந்தார். 2011 முதல் இவருக்கு வாழ்க்கையில் இறக்கம் ஏற்பட்டுவிட்டது. 

குரு மூன்றாவது மற்றும் பனிரெண்டாவது வீட்டிற்க்கு சொந்தகாரர். இரண்டாவது வீட்டில் அமர்ந்திருக்கிறார். குருவோடு சூரியன் சுக்கிரன் என்ற கிரகங்கள் சேர்ந்து அமர்ந்ததால் குருவால் தனகாரத்திற்க்கு உரிய வீட்டோடு பலனை தரமுடியவில்லை. 

குருவை சூரியன் கெடுக்கவில்லை. சுக்கிரன் தான் கெடுத்துவிட்டார். இருவரும் ஒரே நட்சத்திரத்தில் சென்றுக்கொண்டு இருக்கிறார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் இருகிரகமும் சென்றுக்கொண்டு இருக்கின்றது.

பூரட்டாதி குருவின் நட்சத்திரம் என்றாலும் சுக்கிரன் கூட இருந்ததால் பலனை தரமுடியவில்லை. அவர் காரத்துவம் வகிக்கும் வீடு சரியில்லை என்பதால் அதிகமான விரையத்தை தந்துவிட்டது.

என்ன தான் சொந்த நட்சத்திரமாக இருந்தாலும் அந்த நட்சத்திரத்தில் அவர் தனியாக இருந்தால் பிரச்சினை இல்லை கூட வில்லன் வேறு அமர்ந்து சென்றதால் இந்த நிலை ஏற்பட்டது.

ராகு சுயபுத்தியில் நல்ல பலனை தந்தது. ஒரு தசா சுயபுத்தியில் அதிகமான நன்மையை வழங்குகிறது என்றால் பிறகு வரும் புத்திகள் மிகப்பெரிய கெடுதலை தரும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டியதில்லை.அதன் பிறகு வந்த சனியின் புத்தியும் அந்தளவுக்கு சரியில்லை என்றே சொல்லலாம் இதுவரை இவருக்கு எந்த வித நன்மையும் வழங்கவில்லை. 

லக்கினாதிபதியாக சனிக்கிரகம் இருந்தாலும் அவர் ஆறாவது வீட்டில் போய் அமர்ந்திருக்கிறார். முதல் ம்ற்றும் இரண்டாவது வீட்டிற்க்கு உரிய காரத்துவத்தை தருவார்க என்று எதிர்பார்த்தால். அதே சனி இவரை கெடுக்கிறது.

கோச்சாரரீதியாக இவருக்கு தற்பொழுது கண்டசனியாக வரும் சனி இவரை போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறார்.மேஷராசியை கொண்டவர்களுக்கு எந்த வித விஷேச தசா நடந்தாலும் கோச்சார ரீதியாக வரும் சனி அவர்களை போட்டு தாக்கிவிடும்.

சிறிய அளவில் பலனை மட்டும் சொல்லியுள்ளேன். மீதி இருப்பவற்றை ஏற்கனவே ராகு தசாவைப்பற்றி எழுதியுள்ள பலனை வைத்து பார்த்துக்கொள்ளுங்கள்.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KVenkateswaran said...

எந்த லக்கினாதிபதியும் சுபரே, ஆனால் சனி லக்கினாதிபதியாக இருந்தாலும் அவர் தசாநாதனுக்கு எட்டில் நின்றதால் அவரால் நற்பலன் வழங்க இயலாது என்பது அடிப்படை.