வணக்கம் நண்பர்களே!
நீங்கள் ஒரு கிரகம் பாதிப்படைந்தால் அநத கிரகத்திற்க்கு பரிகாரம் செய்துக்கொண்டிருப்பீர்கள். நாங்கள் அதனோடு தொடர்புடைய கிரகத்திற்க்கு பரிகாரம் செய்து அதற்கு தீர்வு காண்போம்.
ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்க்கு மூன்றாவது வீட்டில் சனியும் குருவும் சேர்ந்து நிற்கிறார்கள். லக்கினத்திற்க்கு ஆறாவது வீட்டில் சூரியன் நிற்கிறார். இந்த நபர்க்கு குரு தசா நடைபெற்று வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு குரு தசா கெடுதலை செய்கிறது. குரு கிரகம் சரியில்லை. தசா முழுவதும் பிரச்சினையை கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த ஜாதகத்திற்க்கு என்ன செய்தோம். சனிக்கு குருவுக்கு பரிகாரம் செய்தால் பிரச்சினை தீராது என்று கணித்து பார்த்துவிட்டு வேறு ஐடியா செய்தோம். ஆறாவது வீட்டில் சூரியன் இருக்கின்றது. சனியின் பார்வை சூரியனுக்கு பிரச்சினை கொடுக்கிறது. எந்த ஜாதகத்திலும் உதயகிரகம் பாதிப்படைந்தால் எந்த கிரகமும் நல்லது செய்யாது. உதயகிரகம் என அழைக்கப்படுவது சூரியனை தான். உடனே உதயகிரகமான சூரியனுக்கு பரிகாரம் செய்தோம்.
உதயம் சரியாக நடந்தது. சனியின் தாக்குதல் குறைந்தது. உதயம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் குருவும் பலனை வழங்கஆரம்பித்தது. அவரும் நல்ல நிலையில் வந்தார். இது ஒரு புதியமுறையில் செய்தது. ஒவ்வொரு கிரகத்தையும் நன்றாக பார்த்துவிட்டு இப்படி பரிகாரம் செய்துகொடுக்கின்றேன். இது எல்லாம் செய்வதற்க்கு மந்திர சாஸ்திரமும் தெரிந்து இருக்கவேண்டும்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
please visit www.astrogurukkal.com
Post a Comment