வணக்கம் நண்பர்களே!
என்னிடம் ஒரு நபர் சோதிடம் பார்க்க வந்தார். அவர் சொன்னார் நான் மதுபான பார் வைத்து நடத்திக்கொண்டு இருக்கின்றேன். என்னுடைய வியாபாரம் சரியாக செல்லவில்லை அதற்கு காரணம் என்ன என்று கேட்டார்.
அவருடைய ஜாதகத்தை பார்த்தேன். அவரின் ஜாதகத்தில் குரு கிரகம் உச்சத்தில் இருந்தது. இவருக்கு இந்த தொழிலை பரிந்துரை செய்தவர் ஒரு சோதிடர். அவர் பத்தாவது வீட்டு நிலையை மட்டும் வைத்து சொல்லியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒருத்தர்க்கு தொழிலை பற்றி சொல்லும்பொழுது தொழில்ஸ்தானத்தை மட்டும் வைத்து சொல்லகூடாது. அவருடைய ஜாதகத்தில் எந்த கிரகமாவது உச்சத்தில் இருக்கின்றதா என்றும் பார்க்கவேண்டும்.
உச்சத்தில் இருக்கும் கிரகம் அவருக்கு தொழிலையும் தரும். உச்ச கிரகத்தை கொண்டு அந்த கிரகம் எந்த தொழிலை குறிக்கின்றதோ அந்த கிரகத்தின் தொழிலை செய்யமுடியும். குரு கிரகம் உச்சத்தில் இருக்கும் நபர் எந்த காலத்திலும் தவறான தொழிலை தேர்ந்தெடுக்ககூடாது.அப்படி தேர்ந்தெடுத்தால் அவர் அந்த தொழிலில் நஷ்டத்தை அடைவார்.
குரு கிரகம் ஒரு நாளும் தவறான வழியில் செல்வதற்க்கு வாய்ப்பு அளிக்காது.இந்த ஜாதகருக்கு குரு உச்சத்தில் இருந்துக்கொண்டு இவர் பார் வைத்தால் எப்படி வியாபாரம் நடக்கும். நீங்கள் வியாபாரத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் வியாபாரத்தை மாற்றினார. இப்பொழுது நல்ல முறையில் ஒரு வியாபாரத்தை தேர்ந்தெடுத்து செய்து வருகிறார்.
நீங்களும் சோதிட பலன் சொல்லும்பொழுது எந்த கிரகம் உச்சம் பெற்று இருக்கின்றது என்று பார்த்துவிட்டு அதற்கு தகுந்தார்போல் பலனை சொல்லவேண்டும். அப்பொழுது வரும் நபர்கள் சிறந்த முறையில் பயன்பெறுவார்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
Ayya Vanakkam,
En jathakatthil sukkiran utcham, sevvai utcham, raakhu utcham, Guru aatchi
Aanalum ennai velaikku selvathe nallathu enkiraar jothidar.
Naan suya tholil seiyalama?
Garments factory nadatthalama/eppothu?
My DOB- 2-3-1975, 5.30AM,Bhavani(Erode district)
Regards
Sengotaiyan.PK
Tirupur
94421-85221
Post a Comment