Followers

Sunday, February 10, 2013

பூர்வ புண்ணியம் 30



வணக்கம் நண்பர்களே !

                     நமது நண்பர்கள் அனைவரும் பூர்வபுண்ணியத்தொடரில் ஆர்வமாக உள்ளது நன்றாக தெரியவருகிறது. அனைவரும் இதனைப்பற்றி தான் கேட்கிறார்கள்.

ஒரு சிலர் குலதெய்வ வழிபாடு இதற்கு உதவுமா என்று கேட்கிறார்கள். பூர்வபுண்ணியம் கெடும் நபர் குலதெய்வ வழிபாடு செய்தால் பிரச்சினையை தான் கொடுக்கும். உங்கள் குடும்ப நபர்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எந்த ஜாதகத்தில் பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கிறதோ அந்த நபரை அழைத்துக்கொண்டு உங்களின் குலதெய்வத்தின் கோவிலுக்கு சென்று வாருங்கள். அப்பொழுது உங்களுக்கு ஏதாவது வழி கிடைக்கிறதா என்று பார்க்கலாம். 

நீங்கள் தனியாக தான் சென்று வருவேன் என்று சென்றால் கோவிலுக்கு செல்வது கடினமான ஒன்றாகும். அப்படியே சென்று வந்த பிறகு உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் பிரச்சினை வரும். இது சும்மா இருக்கிற சங்கை ஊதி கெடுத்தான் ஆண்டி என்ற கதையாக மாறிவிடும்.

உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு எதனால் பூர்வபுண்ணியம் கெட்டது என்று பாருங்கள். கெடுத்த கிரகத்தின் அதிதேவதையை வணங்கி வாருங்கள். அந்த தேவதையிடம் சம்பந்தப்பட்ட நபர் யார் என்று எனக்கு காட்டிக்கொடு என்று கேளுங்கள். கண்டிப்பாக இந்த முயற்சி வெற்றியை தரும். கிரகத்தை வணங்காமல் அதிதேவதையை வணங்கும்போது உங்களுக்கு வழி நிறைய கிடைக்கும். சம்பந்தப்பட்ட அதிதேவதை அந்த நபரை நேரில் அல்லது கனவில் காட்டிக்கொடுத்துவிடும். 

பூர்வபுண்ணியம் என்பது சிக்கல் பிடித்த ஒரு வேலை. அந்த சிக்கலை உடைத்து எடுக்க கொஞ்சநாள்கள் ஆகும். நாம் அன்றாடம் நமது வேலையும் பார்த்துக்கொண்டு இந்த வேலையையும் பார்த்துக்கொண்டு இருக்கலாம்.

நமது தளத்தின் வழியாக ஒன்பது பேர்கள் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட நபருக்கு உதவிசெய்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் என்னுடைய ஆலோசனைப்படி உதவிகளை செய்துக்கொண்டு இருக்கிறார்கள். 

ஆறு பேர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களாகவே இருக்கிறார்கள். மீதி மூன்று பேர் வேறு நபர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு பிரச்சினை இல்லை. மூன்று பேர்கள் மட்டும் அவர்களுக்கு எப்படி உதவி செய்கிறது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் இருப்பது வேறு ஊர்களில் அவர்களிடம் போய் நான் தான் முன்ஜென்மத்தில் உனக்கு கெடுதல் செய்தேன் என்று சொன்னால் அவர்கள் எப்படி இவர்களை நம்புவார்கள். ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்க மாட்டார்களா அவர்களுக்குகாக நான் சிந்தனை செய்துக்கொண்டு இருக்கிறேன். 

ஏதாவது மறைமுக உதவி செய்யலாம் என்று நினைக்கிறேன். இல்லை அவர்களை எப்படி நமது வழிக்கு கொண்டு வருவது என்று சிந்தனை செய்கிறேன். ஏன் என்றால் நண்பர்களுக்கு இதனை சொல்லிவிட்டேன் இப்பொழுது அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன்.

ஒரு நபரால் முன்ஜென்மத்தில் பிற நபருக்கு கெடுதல் செய்தால் அந்த நபரும் இந்த நபரும் எப்பொழுது பார்த்தாலும் கீரியும் பாம்பும் போல தான் இருப்பார்கள். சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள். இருவருக்கும் எந்தவிசயத்திலும் ஒற்றுமை இருக்காது. இது மிகப்பெரிய பிரச்சினை. இவர்களை சமாதானம் செய்து அவர்களை வழிக்கு கொண்டுவரவேண்டும்.

உங்களால் முன்ஜென்மத்தில் பாதிக்கப்பட்ட ஆத்மா இப்பொழுது பிறப்பெடுத்து இருக்கிறதா என்று வேறு பார்க்க வேண்டும். அது பிறப்பெடுக்காமல் இருந்தால் மிகப்பெரிய சிக்கல். அந்த ஆத்மாவை எப்படி சாந்தப்படுத்த வேண்டும் என்று வேறு சிந்தனை செய்ய வேண்டும். அந்த ஆத்மாவும் பிறப்பெடுத்தது மனிதனாக இருந்தால் பரவாயில்லை. அது புல் செடியாக போயிருந்தால் அதைவிட மிகப்பெரிய சிக்கல்.

பூர்வபுண்ணியத்தை பொருத்தவரை பல சவால்களை ஜாதககதம்பம் எதிர்நோக்கி உள்ளது என்பது உண்மை. அனைத்து சவால்களையும் முறியடித்து உங்களின் கர்மாவை தீர்க்க இறைவன் வழி காட்டுவான் என்ற நம்பிக்கை உள்ளது.

இது ஏன் மிகப்பெரிய சவால் என்று நான் சொல்லுகிறேன் என்றால் உங்களை ஆன்மீகத்திற்க்கு இழுத்து அதன் பிறகு உங்களின் கர்மாவின் கணக்கை தீர்க்க நான் உதவவேண்டும். பூர்வபுண்ணியம் கெடும்போது ஆன்மீகம் என்பது மிகப்பெரிய சவாலான ஒரு விசயம். படிப்படியாக தான் உயர்த்த வேண்டும்.

பகவத்கீதையில் கண்ணன் அர்சுனனை பார்த்து ஒன்று சொல்லுவார். ஊனகண்ணால் என்னை காணமுடியாது உனக்கு ஞானகண்ணை தருகிறேன் அப்பொழுது என்னை பார் என்று சொல்லுவார். பூர்வபுண்ணியம் கெடும் ஆட்கள் ஊனகண்ணை வைத்துள்ளவர்கள் அவர்களுக்கு ஞானகண்ணை கொடுத்து அவர்களை பார்க்க வைக்கவேண்டும். இந்த ஒரு விசயத்திற்க்கு தான் பல ஆன்மீகவாதிகள்,சோதிடர்கள் அனைவரும் கர்மாவை தீர்க்கமுடியாது என்று சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்வார்கள். இந்த ஜென்மத்தை விட்டுவிட்டால் வேறு எந்த ஜென்மத்தில் கர்மாவை தீர்க்க முடியும்.

பூர்வபுண்ணியத்திற்க்கு ஒரு வழியை சொல்லியுள்ளேன். நீங்கள் அதனை கடைபிடித்து வெற்றிக்கொள்ளுங்கள். மேலும் தகவலுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: