Followers

Monday, February 11, 2013

ரிஷபம் : ஐந்தில் செவ்வாய்



வணக்கம் நண்பர்களே!

                      ரிஷப ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். கன்னிக்கு செவ்வாய் பகை கிரகம். 

இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?

செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார். சொந்த குழந்தைக்கு பாதிப்பை கொடுத்திருப்பார் மற்றும் மாமனுக்கும் தொல்லைக் கொடுத்திருப்பார்.

மேலும் விளக்கம்

செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார். 

5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.

8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான். இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம். விபத்து மரணம் கூட ஏற்படும்.

அடையாளம்?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். தாய்மொழி மற்றும் சமஸ்கிரத மொழி தெரிந்திருக்கும்.மிதமான உயரமாக இருப்பார்.இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்நதிருக்கும்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறத்தில் இருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார். தாய்மொழி மட்டும் தெரிந்திருக்கும். இவரின் வீடு வடமேற்கில் இருந்திருக்கும்.

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.தாய்மொழி தெலுங்கு பேசுவார். உயரமானவாராக இருந்திருப்பார். இவரின் வீடு தெற்கு பக்கம் இருந்திருக்கும்.

எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?

செவ்வாய் ஒரு போர்கிரகம். கண்டிப்பாக ஆயுதங்களால் தாக்கி கொன்றுருப்பார். இவர் தாக்கப்பட்டதால் அவருக்கு காயம் ஏற்பட்டு நீண்ட நாட்கள் சென்று அவர் இறந்திருப்பார்.

செவ்வாய் தீக்காயங்களுக்கு காரகம் வகிப்பதால் தீயால் கூட அவருக்கு தீங்கு ஏற்படுத்திருப்பீர்கள்.

நீங்கள் எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள் ?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

தலையில் தாக்கி கொன்றுருக்ககூடும்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

முகத்தில் தாக்கிருக்ககூடும் மற்றும் வயிற்றில் தாக்கியும் கொன்றுருப்பார்கள்

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

கையை தாக்கி அதிக ரத்தம் வெளிவந்ததால் அவர் இறந்திருக்ககூடும்.

நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?

கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு அல்லது தெற்க்கில் இருப்பார். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து வடமேற்கு அல்லது தெற்க்கில் இருப்பார். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.

கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்

உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கு திசையில் இருப்பார். உங்களின் ஜாதகங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்து்கொள்ளுங்கள்.

பரிகாரம்

செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர் அவரை நீங்கள் வணங்கி அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். முருகனை வணங்கினால் முன்ஜென்மத்தின் நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.

இதனை படித்துவிட்டு யாரும் பயம்கொள்ள தேவையில்லை. உங்களின் ஜென்மத்தை பற்றி அறி்ந்துக்கொள்ளுங்கள் அதனுடன் கர்மாவை தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை தருகிறேன். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: