வணக்கம் நண்பர்களே !
மாணவர்களுக்காக எழுதிய மூச்சுப்பயிற்சியை அனைவரும் செய்கிறார்கள் என்ற செய்தி எனக்கு வருகிறது. என்ன செய்வது சிறுவர் மலரை பெரியவர்கள் படிப்பது போல இதனை செய்கிறார்கள். சிறுவயதில் விட்டதை இப்பொழுது செய்கிறீர்கள் பரவாயில்லை அனைவரும் செய்து பயன்பெறுங்கள்.
தரையில் படுத்துக்கொண்டு தலையணை இல்லாமல் வெறும் தரையில் படுத்துக்கொண்டு மூச்சு விடுவதை கவனியுங்கள். இதுவே மிகப்பெரிய செயல். மூச்சை கவனித்தல் சிறந்த ஒன்று.
பயிற்சி
தரையில் படுத்துக்கொண்டு மூச்சை கவனித்த பிறகு ஒரு கையை நெஞ்சில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த கையை எடுத்து வயிற்றின் அடிப்பகுதியில் வைத்து மூச்சை நன்றாக இழுங்கள். பிறகு மூச்சை சிறு நேரம் சென்ற பிறகு மெதுவாக வெளியே விடுங்கள். நுரையீரல் முழுவதும் காற்றை நிரப்பி வெளியிடும்போது உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.
மூச்சை உள்ளிழுத்து வைக்கும் காலஅளவு 5 விநாடிகள் போதும். அப்படி வைப்பது கூட கடினமான இருந்தால் 3 விநாடிகள் உள்ளிழுத்து வையுங்கள் இது போதும்.
ஆழ்ந்து சுவாசித்தல் என்பது நுரையீரல் முழுவதும் நாம் பயன்படுத்துதல் போல் ஆகும் அந்த நேரத்தில் மட்டும் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் காற்று சக்தி போகும். உங்களின் உடல் புத்துணர்வு பெறும்.
உங்களின் உடலில் நோய் என்பதே வராது. அதே நேரத்தில் நல்ல நினைவாற்றல் வரும். மனது உறுதி பெறும் எடுக்கும் முடிவில் தெளிவு இருக்கும்.
நண்பர்களே அனைத்து மாணவர்களுக்கும் இதனை நீங்களே சொல்லிக்கொடுங்கள் நீங்கள் ஒரு முறை செய்து பார்த்துவிட்டு கூட இதனை சொல்லிக்கொடுக்கலாம். உங்களால் முடிந்தளவு இதனை பரப்புங்கள். இறைவன் நமக்கு நல்லவழியை காட்டுவான்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment