Followers

Thursday, February 28, 2013

கேள்வி & பதில்

நண்பர் கிருஷ்ணா ஒரு சில கேள்விகளை கேட்டார் அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் உங்களுக்கும் பதில் அளிக்கிறேன்.

கர்மவினை என்று சொல்லி முன் ஜென்மத்து நபர்களை தேட சொல்லுகிறீர்கள் ?

உங்கள் லாஜிக் படி பார்த்தால் கசாப்பு கடை காரன் கடவுளை அடையவே முடியாது போல இ ருக்கிறதே :)

கசாப்பு கடை காரன் ஆட்டை வெட்டுகிறான் என்றால் அந்த கர்மா யாரை சேரும் ?
கசாப்பு கடைகாரனையா? ஆடு வளர்தவனையா? ஆட்டை விலைக்கு வாங்கி விற்றவனையா ?மட்டன் ஆக்கி சாப்பிட்டவர்களையா? 

சரி இறந்த ஆடு கிருஷ்ணா வாகவோ இல்லை ராஜேஷ் சுப்பு வாகவோ பிறவி எடுத்து விட்டது என்று வைத்து கொண்டால் ....நெறைய பேர் நம்மை தேடி வந்து பரிகாரம் செய்ய வேண்டி இருக்குமே :)

நான் என்றைக்காவது அசைவம் சாப்பிடுவர்கள் கடவுளை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேனா அல்லது கசாப்புகடைக்காரன் கடவுளை அடையமுடியாது என்று சொல்லியுள்ளேனா? அனைவரும் அடையலாம். நான் இப்பொழுது மனிதனுக்கு மட்டும் சொல்லிக்கொண்டுயுள்ளேன். பூர்வபுண்ணியபகுதியில் ஐந்து சதவீதம் தான் முடிவுடைந்துள்ளது. 

கர்மாவின் கணக்கை தீர்ப்பவன் இறைவன். அவன் தான் ஜனாதிபதி. அவனிடம் தான் உங்களின் கணக்கு இருக்கிறது. ஜனாதிபதி பார்த்து தூக்கு போகிறவனை கூட நிறுத்தி வைப்பது போல கர்ம வினைகளை தீர்ப்பவன் இறைவன். 

ஒரு உயிர் பூமியில் ஜனிக்கும்போது இவ்வழியாக வரவேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது அதன் படி அதன் கர்மவினைகள் பலன்படி ஆடு வளர்பவனிடம் இருந்தும் விற்பனிடம் இருந்தும் வெட்டுபவனிடம் இருந்தும் பிறகு உண்பவனிடம் இருந்து தன் கர்மாவினைகளின் பயனாக ஒவ்வொன்றாக குறைந்து விடுகிறது. ஆனால் ஆடு இங்கு வெட்டப்படும்போதே அதனுடைய உடலை பல உயிர்களுக்கு உணவாக கொடுக்கிறது அதுவும் ஒருவிதத்தில் புண்ணியத்தை தேடிக்கொண்டு தான் செல்லுகிறது. 

எந்த ஒரு உயிரும் அடிப்படையாக வாழ்வதற்க்கு ஒரு சில கர்மாக்களை செய்ய தான் வேண்டும் என்று கிருஷ்ணரே சொல்லியுள்ளார். நீங்கள் சுவாசிக்கும்போது ஒரு சில உயிர் இறக்க தான் நேரிடும். அது கர்மாவின் கணக்கில் சேராதான் செய்யும். 

இறைவனின் வட்டத்தில் உலகம் சுற்றிக்கொண்டு செல்லும். அந்த வட்டத்தில் ஒவ்வொரு கர்மாவாக நிறைவேற்றிக்கொண்டு ஒரு ஆத்மா பயணம் செய்துக்கொண்டுள்ளது அந்த வட்டத்தை பூர்த்தி செய்ய பல கோடி வருடங்கள் செல்லும். ஞானிகள் என்ன செய்வார்கள் அந்த வட்டத்தில் செல்லுகின்ற ஆத்மாவை செல்லும் வருடத்தை குறைத்து நேரிடையாக கடவுளிடம் சரணடைய வைப்பார்கள். இப்பொழுது ஞானிகளுக்கு பற்றாக்குறை இருக்கிறது ஆத்மாக்களின் எண்ணிக்கை கூடிவிட்டது. உங்களுக்கு குறுக்குவழியில் செல்லுவதற்க்கு நான் சம்பந்தப்பட்டவரை சந்தித்து அதற்கு தீர்வைக்கண்டு செல்லுங்கள் என்று சொல்லுகிறேன்.

சரி சித்தார்த்தன் என்பவன் நடு இரவில் தன் பொண்டாட்டி பிள்ளை களை விட்டு விட்டு ஓடி மகா பாவம் செய்தானே அவன் எப்படி ஞானம் பெற்று புத்தன் ஆனான் ? பாவி அல்லவா ஆகி இருக்க வேண்டும் ?

புத்தர் ஞானம் பெற்றபிறகு வந்து பார்த்த முதல் ஆள் யார் தெரியுமா? அவருடைய மனைவியை தான் முதலில் சந்தித்தார். அவர் மனைவிடம் அவர் சொன்னது நான் இங்கிருந்து சென்றது தவறு. உன்னுடன் இருந்துக்கொண்டே ஞானத்தை பெறலாம் என்று தான் கூறுகிறார். அவரே தெரியாமல் தான் செய்திருக்கிறார். 

கோபத்தால் ஒருவரய் நீங்கள் திட்டி காயபடுத்தினால்..... அந்த நபரை நீங்கள் தேடுவது வெட்டி வேலை ............ கோபம் எங்கே இருந்து வருகிறது என்று பாருங்கள் .....அது தான் பரிகாரம் ............ ஏன் என்றால் நீங்கள் கோபத்தால் ஆயிரம் பேரை மனதால் கொன்று இருக்கலாம் ......... ஆயிரம் பேரை தேடுவது வீண் வேலை .........கோபத்தை வெல்வது தான் முதல் வேலை :)

கோபத்தை வென்றால் கர்மாவை குறைக்கலாம் என்று சொல்லியுள்ளீர்கள். கசாப்புகடைக்காரனுக்கும் ஆட்டுக்கும் பங்காளி சண்டை இல்லை. அவன் நோக்கம் பணம் ஆட்டின் மீது கோபத்தை காட்டுவது அல்ல. 

வால்மிகி என்ற பாவி வேடன் எப்படி முனிவன் ஆனான் ?

வால்மிகி செய்த காரியங்களிலும் சில புண்ணியங்கள் இருந்திருக்கின்றன. கண்ணப்பநாயனார் சிவனை பார்த்தவுடன் வேறு எதையும் அவன் உண்ணவில்லை. வேறு எந்த தவறையும் அவன் செய்யவில்லை. அர்ப்பணிப்பு குணம் வந்துவிடுகிறது. அவர்கள் செய்த தவறு அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் செய்த தவறை கடவுள் ஏற்கிறார். நாம் என்ன செய்கிறோம் தெரிந்தே அனைத்து தவறும் செய்கிறோம்.

நண்பர்களே இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிருஷ்ணருக்கே பாடம் எடுத்திருக்கிறேன்  அல்லவா.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

தனி காட்டு ராஜா said...

நண்பர்களே இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன். கிருஷ்ணருக்கே பாடம் எடுத்திருக்கிறேன் அல்லவா.//////

:)