Followers

Saturday, February 2, 2013

பூர்வ புண்ணியம் 24



ணக்கம் ண்பர்களே !
                     பூர்வ புண்ணிய பகுதியில் வெளிவரும் பதிவுக்கு நல்ல வரவேற்று இருக்கிறது இதனை படித்துவிட்டு பெரும்பாலான நண்பர்கள் பாராட்டுகிறார்கள். 

அனைவரும் என்னிடம் கேட்கும் கேள்வி அவர்களை எப்படி சந்திப்பது என்று கேட்கிறார்கள். என்னால் முடிந்தளவு சோதிடம் மூலம் விளக்கம் அளிக்கிறேன். அதனை பார்த்து நீங்கள் தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுடன் முன்ஜென்மத்தில் வாழ்பவர்கள் உங்களுடன் இந்த ஜென்மத்தில் வாழ்வார்கள்.

கடவுளின் கருணை

நாம் யாருக்கு அதிகபட்சமாக தீங்கு செய்கிறோமே அவர்கள் மட்டும் இந்த ஜென்மத்தில் நம்மளுடன் வாழ்வதில்லை அப்படி நம்மால் முன் ஜென்மத்தில் பாதிக்கப்பட்டவரை உங்களின் வாழ்நாட்களில் சந்திக்க கடவுள் ஒரு தடவை உங்களின் கதவை தட்டுவார். அந்த நபர் உங்களை தேடி ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களிடம் வருவார். அப்படி வருபவரை உங்களின் சக்தியால் அடையாளம் கண்டுக்கொண்டு விடுங்கள் அப்படி அடையாளம் கண்டுக்கொண்டுவிட்டால் நீங்கள் கும்பிட்ட தெய்வம் உங்களை கைவிடவில்லை இது தான் கடவுளின் கருனண என்று பெயர். 

நம்மால் எப்படி கண்டுபிடிப்பது?

இது பெரிய விஷயம் கிடையாது. வெகு எளிதான ஒரு காரியம் தான். என்னது எளிதான காரியமா? ஆமாம் எளிதான் காரியம் தான் நண்பர்களே எப்படி நீங்கள் சொல்லுங்கள் பார்க்கலாம் என்று உங்களின் மனது நினைக்கிறது எனக்கு தெரிகிறது.

நீங்கள் தினந்தோறும் கடவுளை வணங்கும்போது உங்களின் அடையாளத்தை விட்டுவிட்டு வணங்குங்கள் எளிதில் கண்டுபிடிக்கலாம்.

அடையாளம் என்றால் என்ன?

நான் மகேஸ். நான் இவ்வளவு படித்திருக்கிறேன். நான் மாதம் லட்சகணக்கில் சம்பாதிக்கிறேன். என்னுடைய குடும்பம் ஊரில் பெரியது. எனது ஜாதி மிகப்பெரிய பலம் கொண்டது. என்னுடைய அந்தஸ்து என்று ஏகாப்பட்ட அடையாளத்துடன் கடவுளை நீங்கள் பார்ப்பீர்கள் இந்த அடையாளத்தை பூஜையறையில் உள் நுழையும்போது கழட்டிவைத்துக்கொண்டு சென்றாலே போதும். உங்களால் அனைவரையும் எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம். ஆத்மா இருக்கின்ற உணர்வோடு நீங்கள் செல்லும்போது அனைத்து ஆத்மாக்களும் இருக்கும் இடம் உங்களால் அடையாளம் காணமுடியும்.

கடவுளின் முரண்பாடு

நாம் அப்படி சந்தித்துவிட்டால் அந்த நபர் நம்மைப்போல் கண்டிப்பாக இருக்கமாட்டார். நீங்கள் ஒரு நிலையில் இருப்பீர்கள் அவர் ஒரு நிலையில் இருப்பார். இருவரையும் ஒரே நிலையில் கடவுள் படைப்பதில்லை. ஏன் என்றால் அந்த நிலைக்கு நீ செல்லுகிறாயா என்று சோதனை செய்து பார்ப்பார். உங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். அவர் இருக்கும் நிலையில் நீங்கள் இறங்கிவிட்டீர்கள் என்றால் கடவுள் உங்கள் முன் வந்துவிடுவார்.

முன்ஜென்மத்தில் நாம் அவரை என்ன பாடுபடுத்திருப்போம்  அதனால் இப்படி ஒரு சோதனையை கடவுள் நமக்கு கொடுக்கிறார்.

பல நண்பர்கள் என்னிடம் கேட்கும் கேள்வி 

நான் ஒரு நண்பரை முன்ஜென்மத்தில் கொன்றுருக்கிறேன் அந்த நண்பரை இந்த ஜென்மத்தில் அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை என்னுடன் இருக்கும் நண்பருக்கு நான் உதவி செய்யலாமா?

கண்டிப்பாக கர்மாவின் கணக்கில் இதில் எடுத்துக்கொள்ளபடாது. நீங்கள் ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீட்டின் வாடகையை பக்கத்துவீட்டின் முதலாளிக்கு கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னால் எப்படி சரிப்பட்டுவரும். உங்கள் வீட்டின் முதலாளிக்கு நீங்கள் பணத்தை கொடுத்தால் தான் கணக்கு சரிவரும்.சம்பந்தப்பட்ட நபருக்கு செய்தால் மட்டுமே கர்மாவை நாம் விடமுடியும்.

நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்டார்கள் அனைத்திற்க்கும் விளக்கம் தருகிறேன் பொறுமை தேவை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 




No comments: