வணக்கம் நண்பர்களே!
மனிதன் என்ன தான் அறிவியலில் முன்னேற்றம் கண்டாலும் அவனால் ஒரு குறிபிட்ட எல்லைக்குள் தான் இருக்கிறான். இன்று அறிவியல் முன்னேற்றம் நிலவுக்கு மட்டும் மனிதன் சென்று வந்து இருக்கிறான் ஆனால் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஒவ்வொரு கோள்களும் இப்படி தான் இயங்குகின்றன. அந்த கோள்கள் இங்கு தான் இருக்கின்றன என்ற தகவலை சரியாக கண்டுபிடித்து சொல்லியுள்ளார்கள்.
இதனை மட்டும் அவர்கள் சொல்லவில்லை அந்த கோள்களில் என்ன இருக்கிறது என்றும் சொல்லியுள்ளார்கள். இதனைப்பற்றி எனக்கு அறிய ஆவல் இருந்தது எப்படி இதனை எல்லாம் சொன்னார்கள் அவர்கள் எப்படி அங்கு போய் இருக்கமுடியும் என்று சிந்தனை செய்தது உண்டு. அப்படி சிந்தனை செய்தபோது எனக்கு ஒரு தகவல் கிடைத்தது.
ஒரு மனிதன் பூமியில் இருந்துக்கொண்டோ அல்லது அவன் இறந்தபிறகு இந்த லோகத்தில் தான் வாழவேண்டும் என்று நினைத்தால் அவனால் அங்கு செல்லமுடியும் என்று ஒரு தகவலை பார்த்தேன்.
பல ஞானிகள் சொல்லியுள்ளார்கள் இந்த பூமியை விட மிக அழகாக வேறு உலகமும் இருக்கிறது அதனை வெறும் கண்களால் காணமுடியாது என்றும் சொல்லியுள்ளார்கள்.
எப்படி அந்த கோள்களுக்கு செல்வது என்றால் ஒவ்வொரு கிரகத்திற்க்கும் அதிதேவதை இருக்கிறது அந்த அதிதேவதையை நாம் உச்சாடணம் செய்தால் அந்த கிரகத்திற்க்கு நம்மால் செல்லமுடியும் என்று சொல்லியுள்ளார்கள்.
அறிவியல் இயந்திரங்களை கண்டுபிடித்தாலும் சில கோள்களுக்கு அந்த இயந்திரம் செல்லவே நாற்பது வருடங்கள் ஆகும் என்று சொல்லியுள்ளார்கள். அதில் மனிதன் சென்றால் நாற்பது வருடங்கள் எப்படி அவனால் செல்லமுடியும்.
ஆன்மீகவழியில் எளிதில் போய்சேரமுடியும் என்று எனக்கு தோன்றுகிறது. இதனைப்பற்றி நல்ல ஆராய்ச்சி செய்து மேலும் தகவலை தருகிறேன் அது வரை பொறுமையாக இருங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment