வணக்கம் நண்பர்களே !
கடக ராசிக்கு ஐந்தில் செவ்வாய் நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
கடக ராசிக்கு ஐந்தாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். செவ்வாய்க்கு சொந்த வீடு.
செவ்வாய் சொந்த வீட்டில் இருந்தாலும் அதே பலனை தான் தருவான். செவ்வாய் சொந்த வீட்டில் இருப்பவர்களை பார்த்தால் அதிகமாக கோபத்துடன் இருப்பார்கள்.
இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?
செவ்வாய் சகோதரனுக்கு காரகன் வகிக்கிறார். இவருடைய சகோதரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருப்பார்.
மேலும் விளக்கம்
செவ்வாய்க்கு 7 ஆம் பார்வை நிரந்தரமாக இருந்தாலும். 4, 8 ஆம் பார்வை இருக்கிறதே மிக விசேஷ பார்வை. இவர் கண் வைக்கும் இடம் காலி அந்தளவுக்கு ருத்ர பார்வையை பார்ப்பார்.
5 ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பார்வையிலேயே நம்மை கொன்றுவிடும். முன்ஜென்மத்தின் வினையை கொடுப்பதில் சனி ராகுக்கு இணையானவர். சொல்லபோனால் அவர்களை விட இவர் அதிகமாகவே கொடுத்துவிடுவார். நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவம் கடவுள் ஐந்தாம் வீட்டில் நெருப்பை தூக்கி போட்டுவிடுவார். ஐந்தில் நெருப்பை தூக்கி போட்டால் அதன் தாக்கம் 8 ஆம் வீடடிற்க்கும் 12 ஆம் வீட்டிற்க்கும் கிடைத்துவிடும்.
8 ஆம் வீடு என்பது மரணத்தை காட்டக்கூடிய வீடு என்பதால் அதுவும் பிரச்சினை தான். இந்த ஜென்மத்தில் மரணம் மிக கொடியதாக அமையும் என்பதில் தெளிவாக சொல்லலாம். விபத்து மரணம் கூட ஏற்படும்.
அடையாளம்?
விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்
இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் நல்ல பொன்நிறமாக இருப்பார். நடுத்தர உயரமாக இருப்பார். தாய்மொழி மற்றும் மலையாளம் பேச தெரிந்திருக்கும். இவரின் வீடு வடகிழக்கு திசையில் இருந்திருக்கும்.
விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்
இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் கருப்பாக இருப்பார்.குள்ளமானவராக இருப்பார். அந்நிய மொழி பேசுவார். இவரின் வீடு மேற்கு திசையில் இருந்திருக்கும்.
விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்
இவர் கெடுக்கப்பட்ட ஆட்களோடு நிறம் மாநிறமாக இருப்பார்.உயரமானவராக இருந்திருப்பார். இவரின் வீடு தென்மேற்கு திசையில் இருந்திருக்கும்.
எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?
செவ்வாயின் வீட்டில் அமருவதால் இரத்த காயம் ஏற்படுத்தி கொன்றுருப்பீர்கள்
எந்த இடத்தில் தாக்கி இறந்திருப்பார் ?
விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்
இதயத்தில் வெட்டுப்பட்டு இறந்திருக்ககூடும்.
விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்
கால்களில் வெட்டப்பட்டு கொன்றுருக்ககூடும்.
விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்
கழுத்து பகுதியில் வெட்டப்பட்டு உயிர் போயிருக்கும்.
நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?
விருச்சிக ராசியில் விசாகம் 4 ம் பாதத்தில் செவ்வாய் அமர்ந்தால்
விருச்சிக ராசியில் அனுஷம் நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் வீடு மேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.
விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து இவரின் தென்மேற்கு மற்றும் தெற்கு திசையில் இருக்கும். உங்கள் ஜாதங்களின் பிற கிரகங்களின் நிலை அறிந்து அந்த நபரின் சரியான திசையை அறிந்துக்கொள்ளுங்கள்.
பரிகாரம்
செவ்வாயின் அதிதேவதை சுப்பிரமணியர் அவரை நீங்கள் வணங்கி அந்த நபரை அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள். முருகனை வணங்கினால் முன்ஜென்மத்தின் நபரை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளலாம்.
இதனை படித்துவிட்டு யாரும் பயம்கொள்ள தேவையில்லை. உங்களின் ஜென்மத்தை பற்றி அறி்ந்துக்கொள்ளுங்கள் அதனுடன் கர்மாவை தீர்த்துக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை தருகிறேன்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment