வணக்கம் நண்பர்களே!
நேற்று பதிவு எழுதமுடியவில்லை. நேற்று எனது குரு மற்றும் அவர்களுடன் சேர்ந்தவர்கள் கும்பமேளா சென்றார்கள் அவர்களை அனுப்பி வைக்கும் வேலையில் ஈடுபட்டதால் பதிவை தரமுடியவில்லை. திடீர் என்று சென்றதால் முன் அறிவிப்பும் செய்யமுடியவில்லை.
ஆன்மீக அனுபவத்தில் கடைசியாக பூமி தியானத்தைப்பற்றி பார்த்தோம் இப்பதிவில் வான தியானத்தைப்பற்றி பார்க்கலாம். இது என்னடா வான தியானம் என்கிறார் என்று நினைக்கலாம் இதுவும் நல்ல ஒரு தியானம். எளிமையான தியானம் இது.
மனிதன் தற்பெருமையால் தலைகணத்துடன் விளங்குகிறான். நாம் சிறுபுள்ளி ஆனால் எத்தனை கர்வத்துடன் பிறரிடம் நடந்துக்கொள்கிறோம். என்னமோ அனைத்தும் நம்மை கேட்டுக்கொண்டுதான் நடைபெறுவதுபோல் நம் மனதில் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உலகத்தில் பிறஉயிர்கள் போல் நாமும் இலவசமாக வந்து தங்கியிருக்கிறோம் அவ்வளவு தான் நமது வாழ்க்கை.
தலைகணத்துடன் இருப்பவர்களுக்கு இந்த தியானம் மிகவும் உதவும். இதனை செய்யும்போது பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறுபுள்ளி என்று தோன்றும். அனைத்து தீயகுணங்களும் போய்விடும். ஒரு முறை செய்து பாருங்கள்.எனது நண்பர் பாபு கூட இதனை செய்து கொண்டு இருக்கிறேன் என்று கடந்த முறை கிரிவலம் செல்லும்போது சொல்லிருந்தார். மிகப்பெரிய மாற்றத்தை உணரலாம்.
தியானம்
2. வான் தியானம் Sky Meditation
நீங்கள் பகல் நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் வானத்தை உற்று நோக்க வேண்டியது தான். இதனை செய்யும் போது உங்களின் மனது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்ந்துக்கொண்டு என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் எவ்வளவு நேரமும் இதனை செய்யலாம். குறைந்தது ஒரு பத்து நிமிடம் செய்யுங்கள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Good evening sir.. Useful info.
//* KJ said...
Good evening sir.. Useful info. *//
தங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment