Followers

Sunday, February 3, 2013

தேர்வில் வெற்றியடைய வழிமுறை பகுதி 2



வணக்கம் நண்பர்களே !
                    மாணவர்களின் தேர்வுக்காக ஒரு பகுதியை ஆரம்பித்து அதனைப்பற்றி முதல் பகுதியை வெளியிட்டேன் அதற்கும் நல்ல வரவேற்பை பெற்றது அவர்களின் முன்னேற்றத்திற்க்காக இந்த பகுதியில் ஒரு நல்ல செய்தி பார்க்கலாம்.

மூச்சுப்பயிற்சி பற்றி பார்த்து வருகிறோம். நீங்கள் தேர்வு அறையில் அல்லது ஏதோ ஒரு இக்கட்டான நேரத்தில் முடிவு எடு்க்க முடியவில்லை என்றால் அதற்கு ஒரு வழி இருக்கிறது இக்கட்டான நேரத்தில் முடிவு எடுக்க பெரியோர்கள் கூட தயங்கி அல்லது பயத்தால் முடிவு எடுக்க முடியாமல் இருப்பார்கள். அந்த மாதிரி நேரத்தில் உடனே நீங்கள் முடிவு எடுக்காமல் என்ன செய்யவேண்டும் என்றால் நன்றாக உங்களது மூச்சை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். 

இருப்பத்தியோரு முறை மூச்சை உள்ளிழுத்து விட்ட பிறகு நீங்கள் எடுக்கும் முடிவு சரியான தான இருக்கும். இதனை பெரியோர்கள் கூட செய்யலாம். நல்ல தெளிவான விடை இதற்கு கிடைக்கும்.

உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் முடிவு எடுக்கும்போது இதனை செய்து முடிவு எடுங்கள். உங்களுக்கு இது பயனுள்ளதாக அமையும். என்ன செய்வீர்களா?

நண்பர்களே நமது பிளாக்கைப்பற்றி உங்களின் நண்பர்களுக்கு சொல்லுங்கள் அப்படி இல்லை என்றால் இதில் வரும் செய்திகளை உங்களின் நண்பர்களோடு பகிர்ந்துக்கொள்ளுங்கள்.  என்னால் முடிந்தளவுக்கு புதுமையான கருத்துகளை உங்களுக்கு தருகிறேன். அனைவரும் பயன்பெறவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுங்கள். இறைவன் உங்களை திரும்பிபார்க்க ஒரு வழியில் இதுவும் ஒன்று.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: