வணக்கம் நண்பர்களே!
ரிஷப ராசிக்கு ஐந்தில் குரு நின்றால் முன் ஜென்மத்தில் இவர் என்ன செய்திருப்பார். இவரால் பாதிக்கப்பட்ட நபர் எப்படி இருந்திருப்பார் என்பதை இப்பதிவில் நாம் பார்க்கலாம்.
குரு கிரகம் ஐந்தில் அமருகிறார். குரு அமர்ந்த இடம் கெட்டுவிடும். இவர் நட்போடு அமருகிறார் என்பதால் இவர் முன்ஜென்மத்தில் கெடுதல் செய்திருக்கமாட்டார் என்று எண்ணக்கூடாது. மனித ஜென்மம் கர்மாவை குறைக்க தான் பிறப்பு எடுக்கிறது என்ற நோக்கத்தில் அலசப்பட்ட விசயங்களை உங்களுக்கு தருகிறேன்.
குரு கிரகம் புதனின் வீடாகிய கன்னியில் அமருகிறார். புதன் விஷ்ணு ஆலயத்தை குறிப்பவர். விஷ்ணு ஆலயத்தில் முன்ஜென்மத்தில் பிரச்சினை நடந்திருக்கலாம் அல்லது சிவ விஷ்ணு ஆலயமாக கூட இருக்கலாம்.
இவரால் பாதிக்கப்பட்ட நபர் யார்?
குரு வேதபண்டிட் பிராமணர் போன்றவர்களை காட்டுவதால் அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்திருப்பார்.
எப்படி அவரை நீங்கள் கெடுத்திருப்பீர்கள்?
குரு புதனின் வீட்டில் சொல்லவா வேண்டும் நயவஞ்சகத்தோடு அவரை திட்டம் தீட்டி கெடுதலை செய்திருப்பீர்கள்.
அடையாளம்?
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார். தாய்மொழி மற்றும் சமஸ்கிரத மொழி தெரிந்திருக்கும்.மிதமான உயரமாக இருப்பார்.இவரின் வீடு கிழக்கு பக்கமாக அமர்நதிருக்கும்.
கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் வெண்மை நிறத்தில் இருப்பார். குள்ளமானவராக இருந்திருப்பார். தாய்மொழி மட்டும் தெரிந்திருக்கும். இவரின் வீடு வடமேற்கில் இருந்திருக்கும்.
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
இவர் கெடுத்த ஆட்களோடு நிறம் சிவப்பு நிறமாக இருப்பார்.தாய்மொழி தெலுங்கு பேசுவார். உயரமானவாராக இருந்திருப்பார். இவரின் வீடு தெற்கு பக்கம் இருந்திருக்கும்.
நீங்கள் எந்த இடத்தில் அவரை தாக்கியிருப்பீர்கள் ?
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
உடல் தலையின் பாகங்களில் தாக்கியிருக்க கூடும்.
கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
முகத்தில் தாக்கிருக்ககூடும் மற்றும் வயிற்றில் தாக்கியிருக்ககூடும்.
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
கையை தாக்கி அதிக ரத்தம் வெளிவந்ததால் அவர் இறந்திருக்ககூடும்.
நீங்கள் தேடும் அந்த நபர் இப்பொழுது எந்த திசையில் இருக்கிறார் ?
கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து கிழக்கு அல்லது வடகிழக்கில் இருப்பார்.
கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து வடமேற்கு அல்லது வடகிழக்கில் இருப்பார்
கன்னி ராசியில் சித்திரை நட்சத்திரத்தில் குரு அமர்ந்தால்
உங்களின் வீட்டில் இருந்து தெற்க்கு திசையில் மற்றும் வடகிழக்கு திசையில் இருப்பார்.
பரிகாரம்
புதன் கிழமையில் சிவவிஷ்ணு ஆலயத்தை வழிபட்டுவரவும். சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் பார்க்கலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment