வணக்கம் நண்பர்களே !
பூர்வ புண்ணியபகுதியில் ஒரு நல்ல கருத்தை இருந்து பார்க்கலாம்.
நீரில் போய்க்கொண்டிருக்கும் ஒடத்தை காற்று அடித்துக்கொண்டு போவதுபோல் போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலன்டன் மனம் ஒட்டி இருக்கிறதோ அந்த ஒரே புலன் மனம் வசப்படாத இந்த மனிதனின் புத்தியைக் கவர்ந்து செல்கிறது.
ஓடம் தான் புத்தி காற்றுதான் மனத்துடன் கூடியிருக்கும் ஒரு புலன் ஓடம் செல்லும் நீர்நிலைதான் சம்சார ரூபமான கடல் அந்தக் கடலில் உள்ள நீர்தான் போகங்கள். நீரில் தான் போகவேண்டிய இடத்திற்குப் போய் கொண்டிருக்கும் ஓடத்தைப் பெருங்காற்று இரண்டுவிதமாக தடுமாறச் செய்கிறது. போகும வழியிருந்து திசை திருப்புகிறது அல்லது பயங்கர அலைகளில் மூழ்கடித்து விடுகிறது. திறமை வாய்ந்த ஓடக்காரன் அந்தக் காற்றின் வேகத்தை தனக்கு அனுகூலமாகச் செய்து கொண்டுவிட்டால் காற்று ஓடத்தைத் திசை திருப்ப முடியாது.
போக வேண்டிய இடத்திற்க்கு கொண்டு போய்ச் சேர்க்கும். இவ்விதம் மனமும் புலன்களும் வசப்படாதவன் தன் புத்தியைப் பரமாத்மாவிடம் நிலைநிறுத்த விரும்பினால் கூட அவனுடைய புலன்கள் மனதை இழுத்துக்கொண்டு புத்தியை இரண்டுவிதமாக தடுமாற செய்கின்றன. புத்தி என்னும் ஓடத்தைப் பரமாத்தாவிடமிருந்து வெகுதூரம் விலக்கிக் கொண்டுபோய் பலவிதமான போகங்களைப் பற்றி நினைக்கும்படி புலன்கள் செய்து விடுகின்றன அல்லது அந்த பயங்கர அலைகளில் மூழ்கடித்துப் பாவங்கள் செய்யத் தூண்டி வீழ்த்திவிடுகின்றன.
மேலே நாம் பார்த்தது பகவான் கிருஷ்ணர் சொன்னது.
நீங்கள் சொல்லும் அனைத்து காரணங்களும் இப்படி தான் இருக்கிறது. நீங்கள தடுமாறிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏதோ ஒன்றில் போய் நீங்கள் மாட்டிக்கொள்கிறீர்கள். அது பாசமாக கூட இருக்கலாம் அல்லது பணமாககூட இருக்கலாம். ஒரு ஆன்மீகவாதியாக மாறுவதற்க்கு முதலில் நீங்கள் நல்ல துணிச்சலை வரவழைக்க வேண்டும். முதலில் நாம் எது நடந்தாலும் பரவாயில்லை நமது இலக்கு எது என்பதை தீர்மானிக்க வேண்டம். அந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளும் நாம் அந்த இலக்கிற்க்கு என்று என்ன செய்தோம் என்பதை நீங்கள் எண்ணி பார்த்தால் கர்மாவை குறைத்து அந்த எல்லையற்ற பரமாத்தாவை அடையலாம்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment