வணக்கம் நண்பர்களே!
உங்கள் வீட்டில் லட்சுமி வசிப்பது எப்பொழுது என்று இப்பதிவில் பார்க்கலாம்.
நமது வீடு என்பது நாம் வாழ்கின்ற இடம். அந்த இடத்தை நாம் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். வீட்டில் குப்பைகள் சேரவிடக்கூடாது. வீட்டை சுத்தமாக வைத்திருக்கவேண்டும். இரவில் சேரும் குப்பைகளை ஒரு குப்பைதொட்டில் வைத்து மறுநாள் காலையில் எழுந்து குப்பைகளை வெளியில் கொண்டு கொட்டிவிடவேண்டும். இரவில் குப்பையை வெளியில் கொண்டுபோய் கொட்டகூடாது.
வீட்டில் நன்றான காற்றோட்டம் இருப்பதுபோல் வைத்துக்கொள்ள வேண்டும். ஜன்னல்கள் வழியே காற்று வந்து போவது போல் இருந்தால் திறந்துவைப்பது நல்லது வீட்டில் மேற்கு பக்கம் உள்ள ஜன்னலை திறக்ககூடாது. காற்று வந்துபோவது போல் இருக்கும் வீட்டில் மனிதனுக்கு நோய் வராது.
வீட்டை வாரத்திற்க்கு ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது நன்றாக கழுவிவிடவேண்டும். வீட்டில் நறுமணம் வருவதுபோல் இருக்கவேண்டும். ஒரு சிறு நாற்றம்கூட வீட்டில் இருக்ககூடாது.
நீங்கள் உபயோகப்படுத்தும் துணியை ஒரு இடத்தில் வைக்க வேண்டும். கொடிகயிறுகளில் துணியை தொங்கவிடகூடாது. பயன்படுத்தாத துணிகளை அப்புறபடுத்த வேண்டும் அல்லது ஒரு பெட்டியில் வைத்துவிடவேண்டும்.
விவசாயி குடும்பமாக இருந்தால் தானியங்களை எல்லா இடத்திலும் கொட்டிவைத்திருப்பார்கள் அவ்வாறு வைக்காமல் முடிந்தளவு அதற்கென இடத்தை ஒதுக்கி அந்த இடத்தில் வைக்கவேண்டும்.
வீடு நறுமணத்துடன் சுத்தமாக இருந்தால் வீட்டில் லட்சுமி வந்து நிரந்தரமாக குடிக்கொள்வாள்.
எங்கள் வீடு சுத்தமாக இருக்கிறது ஆனால் பணம்வரவில்லை என்று கேட்டாள். உங்களின் மனதில் குப்பை இருக்கும். மனதில் உள்ள குப்பையை அகற்றுங்கள் உங்களின் வீட்டில் கண்டிப்பாக லட்சுமி குடிக்கொள்வாள்.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment