Followers

Wednesday, February 20, 2013

ஆன்மீக அனுபவங்கள் 70



வணக்கம் நண்பர்களே !
                     அனைவரும் இப்பொழுது கேட்கும் கேள்வி எப்படி நீங்கள் இந்த தூரம் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் கேட்பது ஆன்மீகத்தில் எப்படி வந்தீர்கள் அதற்க்கான வழி என்ன நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள்.

பல பதிவுகளில் நான் சொல்லியுள்ளேன். இந்த பதிவுகளிலும் சொல்லுகிறேன். நீங்கள் ஒரு மனிதனை பார்க்கும்போது அவன் யார் அவனுக்கு என்ன தகுதி இருக்கிறது அவன் எப்படிபட்டவன் என்று பார்ப்பீர்கள். நான் ஒரு மனிதனை பார்க்கும்போது அவனை நான் மனிதனாக மட்டுமே பார்ப்பேன். இந்த ஒன்று தான் என்னிடம் இருக்கின்ற மிகப்பெரிய வித்தை. நான் இப்படி இருக்கும்போது அனைத்தையும் எளிதில் பெறுகிறேன்.

நீங்கள் குறைந்தபட்சம் அடுத்தவர்களை மனிதனாக பார்க்கின்ற மனதை பெறுவதற்க்கு முயற்சி செய்யுங்கள் அப்பொழுது என்னை விட உங்களுக்கு அனைத்தும் பெறமுடியும். நீங்கள் எங்கு போய் ஆன்மீக பயிற்சி எடுத்தாலும் முதல் பயிற்சி இதுவாக தான் இருக்கும். மனிதனை மதிக்கும் குணம். இது இல்லாமல் யாரும் உங்களுக்கு தரிசனம் தரமாட்டார்கள். 

நீங்கள் படிக்கும் புத்தகங்களில் சக்தி, தியானம், யோக என்று பலவிதத்திலும் போட்டு இருப்பார்கள். இதனை படித்துக்கொண்டு இது தான் ஆன்மீகம் என்று செல்லவேண்டாம். ஆன்மீகத்தின் முதல் படி மனிதநேயம். ஒரு நல்ல ஆன்மீகவாதிகளை பார்த்தீர்கள் என்றால் அவர் அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். இது எப்படி நடந்திருக்கும் என்றால் எப்பொழுது ஒரு மனிதன் கடவுள் தன்மையுடன் தொடர்பு ஏற்படுகிறதோ அப்பொழுது அவன் உலக மனிதர்களை பார்த்து இது தன் இனம் இவர்கள் அனைவரும் என் உறவினர்கள் என்று பாசத்துடன் பேச ஆரம்பித்துவிடுவார்கள். மனிதனை மதிக்கும் குணத்தை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக மாறிவிட்டால் உங்களிடம் எந்த ஏற்றதாழ்வுகளும் இருக்ககூடாது. ஆன்மீக வரலாற்றை எடுத்துப்பார்த்தால் ஒவ்வொரு மகான்களும் ஏழை மக்களை தேடி தான் செல்வார்கள். அவர்கள் ஏன் அவ்வாறு சென்றார்கள். இந்த ஜீவனை காப்பாற்ற  பூமிக்கு வந்தேன் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் உங்களின் சுய அடையாளத்தை மறைத்துவிட்டு ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள்.எது ஆன்மீகம் என்பது உங்களுக்கு புரியும்.

அன்பை தான் முதலில் மதங்கள் போதிக்கின்றன ஆனால் நீங்கள் அதனை தான் முதலில் வெறுக்கிறீர்கள்.பிறகு எப்படி ஆன்மீகமுன்னேற்றம் ஏற்படும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: