Followers

Friday, February 15, 2013

நைவேத்தியம்


             
 வணக்கம் நண்பர்களே!
          நாம் வீடுகளில் இறைவனுக்கு என்று நைவேத்தியம் படைப்போம். அந்த நைவேத்தியத்தை தயார் செய்யும்போது நீங்கள் குளித்துவிட்டு நைவேத்தியம் சமைக்க ஆரம்பி்க்க வேண்டும்.

நைவேத்தியத்திற்க்கான தண்ணீரை புது தண்ணீராக அன்று எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அந்த தண்ணீரை வேறு எதற்க்கும் பயன்படுத்த கூடாது. சமைக்கும் போது கதவை சாத்திக்கொண்டு தான் சமைக்க வேண்டும். செய்கின்ற நைவேத்தியத்தின் வாசனை வெளியில் வீசக்கூடாது என்பதற்க்காக கதவை சாத்திக்கொண்டு சமைக்க வேண்டும என்று சொல்லுகிறேன்.

நீங்கள் பயன்படுத்தும் அடுப்பு சுத்தமாக இருக்கவேண்டும். ஏற்கனவே இந்த அடுப்பை வீட்டு உபயோகத்திற்க்கு பயன்படுத்திருக்கலாம் அதனால் அதனை சுத்தமாக தண்ணீரை வைத்து துடைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். 

அரிசியை கையில் எடுத்து வெந்துவிட்டதா என்று பார்க்ககூடாது. நமது கை அதன் மேல் படக்கூடாது. உங்களின் கண்களாலே பார்த்துக்கொள்ளுங்கள். கை பட்டால் அது அசுத்தமானதாக கருதப்படும்.

நைவேத்தியம் படைக்கும் போகும் நேரம் வரை நைவேத்தியத்தை மூடிவைக்கவேண்டும்.சாமிக்கு படைக்கும்போது மட்டும் வைத்திருக்கும் பாத்திரத்தை திறந்து எடுக்க வேண்டும். 

பாத்திரத்தை திறக்கும்போது அதன் மூடியில் இருந்து வியர்வை வரும். அந்த வியர்வையை நீரை எடுத்து சாமியின் முன் இலை வைத்திருப்பீர்கள் அதில் ஊற்றினாலும் நல்லது. சில இடங்களில் வியர்வை நீரை சாமியின் முன்பு தரையில் ஊற்றுவார்கள் இதுவும் நல்லது தான்.

நல்ல சுத்தமாக சமைத்து நைவேத்தியத்தை படைக்கும்போது உங்களுக்கு இறைவன் அனைத்தையும் கொடுப்பான். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: