Followers

Monday, February 18, 2013

ஐந்தில் குரு



ணக்கம் ண்பர்களே 
                    பூர்வபுண்ணியத்தில் நாம் அடுத்து பார்க்க இருப்பது குரு கிரகத்தால் முன் ஜென்மத்தில் ஏற்பட்ட பிரச்சினையை வைத்து என்ன நடந்திருக்கும் என்பதை ஒவ்வொரு ராசியாக பார்க்கபோகிறோம். 

குரு நல்ல கிரகம் தானே அவர் என்ன கெடுதல் செய்ய போகிறார் என்று நீங்கள் நினைக்கலாம். எந்ந ஒரு கிரகமும் ஐம்பது சதவீதம் நல்லது செய்யும் ஐம்பது சதவீதம் கெடுதல் செய்யும். குரு பார்வையிடும் இடம் நன்றாக இருக்கும். அவர் அமரும் இடம் பாழ் என்று உங்களுக்கு தெரியும். குரு பார்க்க கோடி நன்மை வரும். குரு அமரும் இடம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா...

குருவால் கெட்டவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். குரு கிரகம் தீய கிரகங்களோடு இருந்தால் குரு கெட்டுவிடும். குரு வக்கிரமாகவும் இருக்ககூடாது. குரு நீசமாகவும் இருக்ககூடாது. ஐந்தாம் வீட்டுக்குரிய கிரகம் குரு பகவான் தான். குரு ஒருவர் கெடும்போதே முன்ஜென்மத்தில் கடுமையான பாவம் செய்திருக்கிறார் என்று நாம் முடிவுக்கு வந்துவிடலாம். நீங்கள் வேறு எந்த கிரகத்தையும் பார்வையிட தேவையில்லை. முன்ஜென்மத்தில் கடுமையான பாவம் செய்திருக்கிறோம் என்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது.

இருக்கின்ற கிரகங்களில் வேறு கிரகங்கள் கெடுவதற்க்கும் குரு கெடுவதற்க்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. வேறு கிரகங்கள் கெட்டால் யாரோ ஒரு நபருக்கு தீங்கு விளைவித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். குரு கெட்டால் மனிதர்களோடு சேர்ந்து கடவுளுக்கும் தீங்கு செய்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். என்ன டா மனிதனை கண்டுபிடிப்பதே கடினம் இதில் கடவுளை வேறு கண்டுபிடிப்பது என்றால் பெரிய பிரச்சினை என்று நினைக்கலாம். பொறுமையாக இருங்கள் சொல்லுகிறேன். 

குரு கிரகம் கெடாமல் மற்ற கிரகங்கள் கெட்டால் வாழ்க்கையை ஓட்டிவிடலாம். குரு கிரகம் கெடும் போது பெரிய சிக்கலை நீங்கள் சந்திக்கவேண்டியிருக்கும். அது எப்படிபட்ட சிக்கல் முன்ஜென்மங்களில் நீங்கள் செய்தது என்ன என்பதை தொடர்ச்சியாக நாம் பார்க்கலாம் நண்பர்களே.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: